மலேசியா
தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
மலேசியா (மலாய்: Malaysia; ஆங்கிலம்: Malaysia) (/məˈleɪziə, -ʒə/ (கேட்கⓘ) mə-LAY-zee-ə-,_-); என்பது தென்கிழக்காசியாவில் கூட்டாட்சி; அரசியல்சட்ட முடியாட்சி கொண்ட ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும்; மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ளது. மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாக, தென்சீனக் கடலினால் பிரிக்கப்பட்டு உள்ளது.
மலேசியா Malaysia | |
---|---|
குறிக்கோள்: Bersekutu Bertambah Mutu ஒற்றுமையே பலம்[1] | |
நாட்டுப்பண்: நெகாராகூ என் நாடு | |
தலைநகரம் | கோலாலம்பூர்[a] புத்ராஜெயா (நிர்வாக மையம்) |
பெரிய நகர் | கோலாலம்பூர் |
ஆட்சி மொழி(கள்) | மலேசிய மொழி[b] |
பிற மொழிகள் | மலாய் மொழி |
Used for some purposes | ஆங்கிலம்[d] |
இனக் குழுகள் | 69.7.% மலாய் மக்கள் |
அரசாங்கம் | கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி |
சுல்தான் அப்துல்லா | |
• பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
விடுதலை | |
ஆகஸ்டு 31, 1957 | |
செப்டம்பர் 16, 1963 | |
பரப்பு | |
• மொத்தம் | 330,803 km2 (127,724 sq mi) (67வது) |
• நீர் (%) | 0.3 |
மக்கள் தொகை | |
• Q1 2020 மதிப்பிடு | 32,730,000[2] (43-ஆவது) |
• 2020 கணக்கெடுப்பு | 32,447,385[3] |
• அடர்த்தி | 98/km2 (253.8/sq mi) (116-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $1.055 trillion[4] (20-ஆவது) |
• தலைவிகிதம் | $31,243[5] (51-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $415.375 பில்லியன் (36-வது) |
• தலைவிகிதம் | $12,295 (60-ஆவது) |
ஜினி (2015) | 41[6] மத்திமம் |
மமேசு (2015) | 0.810[7] அதியுயர் · 62-ஆவது |
நாணயம் | ரிங்கிட் மலேசியா (RM) (MYR) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 (மலேசிய நேரம்) |
ஒ.அ.நே+8 (பயன்பாடு இல்லை) | |
திகதி அமைப்பு | dd-mm-yyyy |
வாகனம் செலுத்தல் | இடது புறம் |
அழைப்புக்குறி | +60 |
இணையக் குறி | .my |
^ a. கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரமாகவும், நடுவண் அரசின் மையகமாவும் விளங்குகிறது. புத்ராஜெயா நடுவண் அரசின் நிர்வாக, நீதித்துறைகளின் தலையாய மையமாக விளங்குகிறது.
^ b. அரசாங்கத்தின் கொள்கையின்படி பகாசா மலேசியா என்று அழைக்கப்படுகிறது. பகாசா மலேசியா என்றால் மலேசிய மொழி. இருப்பினும் சட்டம் பகாசா மெலாயு அல்லது மலாய் மொழி என்றே சுட்டுகிறது.[8] ^ c. 1967ஆம் ஆண்டு தேசிய மொழிச் சட்டம்: தேசிய மொழி எழுத்துகள் ரூமி எனும் இலத்தீன் எழுத்துகளில் இருக்கும். இருப்பினும் ஜாவி எழுத்துகள் புறக்கணிக்கப்பட மாட்டாது.[9] ^ d. 1967ஆம் ஆண்டு தேசிய மொழி சட்டத்தின் கீழ் சில காரணங்களுக்காக ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம். ^ e. 1965 ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி சிங்கப்பூர் சுதந்திர நாடானது.[10] |
மலேசியத் தீபகற்பத்தின் வடக்கே தாய்லாந்து நாட்டுடன் நிலம்; கடல் எல்லைகளையும்; தெற்கே சிங்கப்பூர்; வடகிழக்கே வியட்நாம்; மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது.
மலேசியாவின் கிழக்கு மலேசியா பகுதி; புரூணை, இந்தோனேசியா நாடுகளுடன் நில, மற்றும் கடல் எல்லைகளையும்; பிலிப்பீன்சு, வியட்நாம் நாடுகளுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.