புது எகிப்து இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
புது எகிப்து இராச்சியம் (New Kingdom of Egypt), இதனை எகிப்தியப் பேரரசு என்றும் அழைப்பர். எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திற்குப் பின்னர் பண்டைய எகிப்தை, பதினெட்டாம் வம்சம், பத்தொன்பதாம் வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தைச் சேர்ந்த பார்வோன்கள் கிமு 1550 முதல் கிமு 1077 முடிய 473 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[1]
புது எகிப்து இராச்சியம் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1550–கிமு 1077 | |||||||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி, நுபியா மொழி, கானானிய மொழி | ||||||||||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||
பார்வோன் | |||||||||||||||||
• கிமு 1550 – 1525 | முதலாம் அக்மோஸ் (முதல்) | ||||||||||||||||
• கிமு 1107 – கிமு 1077 | பதினொன்றாம் ராமேசஸ் (இறுதி) | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
• தொடக்கம் | கிமு 1550 | ||||||||||||||||
• முடிவு | கிமு 1077 | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து சூடான் இசுரேல் பலத்தீன் லெபனான் லிபியா சிரியா யோர்தான் துருக்கி |
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனையின் படி, புது எகிப்து இராச்சியத்தின் காலம் கிமு 1570 - 1544 காலத்தில் துவங்கியது என அறியப்படுகிறது.[2]
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திற்குப் பின் புது எகிப்து இராச்சியத்தை முதலாம் அக்மோஸ் எனும் பார்வோனால் நிறுவப்பட்டது. புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக்குப் பின்னர் 1077-இல் எகிப்தில் மூன்றாம் இடைநிலைக் காலம் துவங்கியது.
பண்டைய எகிப்திய வரலாற்றில் புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம், கலை, பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவ்வாட்சியை எகிப்தின் பொற்காலம் என அறியப்படுகிறது.[3]
பிற்கால புது எகிப்திய இராச்சியத்தின் 19 மற்றும் 20-வது வம்சங்களின் (1292–1069 ) ஆட்சியை, 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ராமேசசை முன்னிட்டு, புது இராச்சியத்தை ராமேசேசியர்களின் காலம் என அழைப்பர். [3]
எகிப்தின் இரண்டாம் இடைநிலக் காலத்தில், எகிப்தை ஆண்ட மெசொப்பொத்தேமியா மன்னரான ஐக்சோஸ் ஆட்சியை முடிவு கட்டி, எகிப்தில் புதிய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இப்புதிய எகிப்து இராச்சியம் பண்டைய எகிப்து, நூபியா மற்றும் மெசொப்பொத்தேமியா பகுதிகளை ஆண்டது.