கொழும்பு
இலங்கையின் வர்த்தகத் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கொழும்பு (ஆங்கில மொழி: Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் சனத்தொகை அடிப்படையில் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
கொழும்பு | |
இடதுபுற மேலிருந்து வலஞ்சுழியாக: இலங்கை வங்கி கோபுரம், கொழும்பு வான்பின்னணிக் காட்சி, கங்காராமையா கோவில், காலி முகத்திடல், பழைய பாராளுமன்றம், கொழும்பு வான்பின்னணிக் காட்சி (கங்காராமையா கோவில்), இலங்கை வங்கி கோபுரமும் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களும், விடுதலைச் சதுக்கம், உலக வர்த்தகமையம் கொழும்பு. | |
மாகாணம் - மாவட்டம் |
- கொழும்பு |
அமைவிடம் | 6.93°N 79.86°E / 6.93; 79.86 |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
37.31 ச.கி.மீ - 0-10 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நகரத் தந்தை | எ. ஜே. எம். முசாம்மில் |
துணை நகரத் தந்தை | பட்ராணி ஜெயவர்த்தனா |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 10001-10015 - +9411 - WP |
இணையத்தளம்: www.cmc.lk/ |
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். [சான்று தேவை] (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1] இவை தவிர சென்னைப் பல்கலைக்கழகம்,[2] மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,[3] பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன.