நவதானியம்
இன்றியமையாத சத்துக்கள் அடங்கிய ஒன்பது தானியங்கள் / From Wikipedia, the free encyclopedia
நவதானியங்கள் (Navdhānya) என்பன கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவையாகும்.[1][2] நவதானியங்கள் என்பது பல இந்திய மொழிகளில் "ஒன்பது தானியங்கள்" என்று பொருள்படும். இந்த ஒன்பது தானிய வகைகளும் இந்திய உணவு பண்டங்களில் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும் முக்கிய பொருட்களாகும்.[3]