அவரை
From Wikipedia, the free encyclopedia
அவரை (ஒலிப்புⓘ) என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும்.[2] இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.[3] இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும்.[4] இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).
அவரை Lablab | |
---|---|
அவரைக் கொத்தும், பூவும் காயும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே (Fabaceae) |
பேரினம்: | இலபிலாபு (Lablab) |
இனம்: | L. purpureus |
இருசொற் பெயரீடு | |
Lablab purpureus (L.) Robert Sweet (botanist) | |
வேறு பெயர்கள் [1] | |
Dolichos lablab L. |
உணவாற்றல் | 209 கிசூ (50 கலோரி) |
---|---|
9.2 g | |
0.27 g | |
2.95 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (5%) 0.056 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (7%) 0.088 மிகி |
நியாசின் (B3) | (3%) 0.48 மிகி |
இலைக்காடி (B9) | (12%) 47 மைகி |
உயிர்ச்சத்து சி | (6%) 5.1 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (4%) 41 மிகி |
இரும்பு | (6%) 0.76 மிகி |
மக்னீசியம் | (12%) 42 மிகி |
மாங்கனீசு | (10%) 0.21 மிகி |
பாசுபரசு | (7%) 49 மிகி |
பொட்டாசியம் | (6%) 262 மிகி |
துத்தநாகம் | (4%) 0.38 மிகி |
Link to USDA Database entry Cooked, boiled, drained, without salt | |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |