போரான்
5 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம் / From Wikipedia, the free encyclopedia
போரான் அல்லது கார்மம் (Boron) என்னும் தனிமம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வேதியியல் தனிமமாகும். இது பெரும்பாலும் போராக்சு (Borax) என்னும் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. இத்தனிமத்தை ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் அதிக அளவில் அகழ்ந்தெடுத்துப் பிரிக்கின்றன. இத்தனிமத்தின் அணு எண் 5. இதன் அணுக்கருவில் ஐந்து நேர்மின்னிகள் உள்ளன. அணுக்கருவைச் சுற்றி ஐந்து எதிர்மின்னிகள் சுழன்று வருகின்றன. இந்த ஐந்து எதிர்மின்னிகளில், இரண்டு உட்சுற்றுப்பாதையில் சுழன்று வருகின்றன. எஞ்சியுள்ள மூன்று எதிர்மின்னிகளும் வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும் திறம் கொண்டவை. கார்மத் தனிமம் பல வடிவங்களைக் கொண்டுள்ளது. படிகமாகவும், படிகமல்லாமலும் திண்ம வடிவம் கொண்டுள்ளது. படிக வடிவிலும் பல்வேறு படிக உருவங்களில் இது இருக்கின்றது. போரான் நைட்டிரைடு (BN) என்னும் பொருள் மிகவும் உறுதியானது. ஏறத்தாழ வைரம் போலும் உறுதியானது. போரான் சிலிக்கான் சில்லு உற்பத்தியில் சிறப்பான பங்கு கொள்கின்றது. இருமுனையம், திரிதடையம் போன்ற நுண்மின்கருவிகள் செய்யப் பயன்படும் குறைகடத்தி சிலிக்கானை பி-வகை (புரைமின்னி அதிகம் உள்ளது) குறைகடத்தியாக மாற்ற போரான் அணுக்கள் சிலிக்கனுக்குள் தேவைப்படும் அளவு புகுத்தப்படுகின்றன.
போரான் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
5B | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||
black-brown | |||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | போரான், B, 5 | ||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈbɔːrɒn/ | ||||||||||||||||||||||||
தனிம வகை | metalloid | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 13, 2, p | ||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
10.811(7) | ||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [He] 2s2 2p1 2, 3 | ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | J. Gay-Lussac & L. Thénard[1] (June 30 1808) | ||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
H. Davy[2] (July 9 1808) | ||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 2.08 g·cm−3 | ||||||||||||||||||||||||
உருகுநிலை | 2349 K, 2076 °C, 3769 °F | ||||||||||||||||||||||||
கொதிநிலை | 4200 K, 3927 °C, 7101 °F | ||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 50.2 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 480 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 11.087 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 3, 2, 1[3] (mildly acidic oxide) | ||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 2.04 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 800.6 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
2வது: 2427.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
3வது: 3659.7 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
அணு ஆரம் | 90 பிமீ | ||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 84±3 pm | ||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 192 பிமீ | ||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||
படிக அமைப்பு | rhombohedral | ||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic[4] | ||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) ~106 Ω·m | ||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 27.4 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) (ß form) 5–7[5] µm·m−1·K−1 | ||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 16,200 மீ.செ−1 | ||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
~9.5 | ||||||||||||||||||||||||
CAS எண் | 7440-42-8 | ||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: போரான் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
·சா |