புரோமின்
From Wikipedia, the free encyclopedia
புரோமின் (Bromine) என்பது Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 35 ஆகும். ஆலசன்களில் புரோமின் மூன்றாவது இலேசான ஆலசன் ஆகும், அறை வெப்பநிலையில் செம்பழுப்பு நிற பொங்கும் திரவமாக புரோமின் காணப்படுகிறது. அதே நிறமுடைய வாயுவாக உடனடியாக புரோமின் திரவம் ஆவியாகிறது. புரோமினின் பண்புகள் குளோரின் மற்றும் அயோடின் ஆலசன்களின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளாக உள்ளது. 1825 இல் கார்ல் யாக்கோப் லோவிக் மற்றும் 1826 இல் அன்டோயின் செரோம் பலார்ட் ஆகிய இரு வேதியியலாளர்கள் புரோமினைத் தனித்துப் பிரித்தனர். புரோமின் என்ற பெயர் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இதன் கூர்மையான மற்றும் விரும்பத்தகாத மணம் இப்பெயருக்கு காரணமாயிற்று.
| |||||||||||||||||||
பொது | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
புரோமின், Br, 35 | ||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை | ஆலசன் | ||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
17, 4, p | ||||||||||||||||||
தோற்றம் | வளிமம்/நீர்மம்: செம்பழுப்பு solid: metallic cluster | ||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) | 79.904(1) g/mol | ||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு | [Ar] 4s2 3d10 4p5 | ||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) | 2, 8, 18, 7 | ||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||
இயல் நிலை | நீர்மம் | ||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | (Br2, நீர்மம்) 3.1028 கி/செ.மி³ | ||||||||||||||||||
உருகு வெப்பநிலை | 265.8 K (-7.3 °C, 19 °F) | ||||||||||||||||||
கொதி நிலை | 332.0 K (58.8 °C, 137.8 °F) | ||||||||||||||||||
நிலைமாறும் புள்ளி | 588 K, 10.34 MPa | ||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் | (Br2) 10.57 கி.ஜூ/மோல் (kJ/mol) | ||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் | (Br2) 29.96 கி.ஜூ/மோல் | ||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) (Br2) 75.69 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||||||
| |||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் | ||||||||||||||||||
ஆக்சைடு நிலைகள் | ±1, 5 (strongly காடிic oxide) | ||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 2.96 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 1139.9 kJ/(mol | ||||||||||||||||||
2nd: 2103 kJ/mol | |||||||||||||||||||
3rd: 3470 kJ/mol | |||||||||||||||||||
அணு ஆரம் | 115 பிமீ | ||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) | 94 pm | ||||||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 114 pm | ||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் | 185 பி.மீ (pm) | ||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||
காந்த வகை | nonmagnetic | ||||||||||||||||||
மின் தடைமை | (20 °C) 7.8×1010 Ω·m | ||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 0.122 வாட்/(மீ·கெ) W/(m·K) | ||||||||||||||||||
ஒலியின் விரைவு | (20 °C) ? 206 மீ/நொ (m/s) | ||||||||||||||||||
CAS பதிவெண் | 7726-95-6 | ||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
மேற்கோள்கள் |
தனிமநிலை புரோமின் மிகவும் வினைத்திறன் மிக்கது ஆகும். எனவே இது இயற்கையில் தனியாகக் கிடைப்பதில்லை. ஆனால் நிறமற்ற கரையக்கூடிய படிகக் கனிமமாக சாதாரண உப்பைப் போல ஆலைடு உப்புகள் என்ற பெயரில் காணப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் புரோமின் அரிதானதாக இருந்தாலும், புரோமைடு அயனி (Br-) கடல்நீரில் மிகுதியாக கரையக்கூடியதாக உள்ளது. வணிக ரீதியாக இந்தத் தனிமம் எளிதில் உப்புநீர் குளங்களிலிருந்து உறிஞ்சப்படுகிறது, குறிப்பாக அமெரிக்கா, இசுரேல் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்நிகழ்வு எளிதில் நடைபெறுகிறது. வில். கடல்களில் உள்ள குளோரின் போல புரோமின் முந்நூறு பங்கில் ஒரு பங்காக காணப்படுகிறது.
உயர் வெப்பநிலைகளில் கரிமபுரோமின் சேர்மங்கள் உடனடியாக தனித்த புரோமின் அணுக்களை வழங்குகின்றன. தனி உறுப்பு சங்கிலி வினைகளை தடுக்கின்ற ஒரு செயல்முறையாக இது கருதப்படுகிறது. இதன் விளைவாக கரிமபுரோமின் சேர்மங்கள் தீத்தடுப்பு வேதிப்பொருள்களாக மிகுந்த பயனளிக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படும் உலகளாவிய புரோமின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட புரோமின் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எதிர்பாராத விதமாக புரோமினின் இப்பண்பு வளிமண்டலத்தில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிமபுரோமின் சேர்மங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரிகையடைகின்றன. இவ்வாறு பிரியும் புரோமின் அணுக்கள் ஓசோன் குறைவுக்கு காரணமாகின்றன. இதன் விளைவாக பூச்சிக்கொல்லியான மெத்தில் புரோமைடு போன்ற பல கரிமபுரோமின் சேர்மங்கள் அதிக அளவில் இன்று பயன்படுத்தப்படுவதில்லை. புரோமின் சேர்மங்கள் இன்னும் கிணறு தோண்டும் திரவங்களில், புகைப்படம் மற்றும் திரைப்பட சுருள்களில், கரிம வேதிப்பொருட்களின் உற்பத்தியில் இடைநிலைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
அதிக அளவு நச்சுத்தன்மைக்கும் புரோமியத்திற்கும் காரணமாக இருந்தாலும், புரோமைடு மற்றும் ஐபோபுரோமசு அமிலத்திற்கான ஒரு தெளிவான உயிரியல் செயல்பாடு சமீபத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது, தற்போது புரோமினும் ஓர் அத்தியாவசியமாக தெவைப்படும் ஒரு தனிமமாக கருதப்படுகிறது. ஒரு மருந்தாக, எளிய புரோமைடு அயனி (BR-) மத்திய நரம்பு மண்டலத்தில் சில தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது, புரோமைடு உப்புக்கள் ஒரு காலத்தில் பெரிய மயக்கமருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. குறுகிய கால செயல்திறன் மருந்துகளாக இவை பயன்படுத்தப்பட்டன.