சில்கா ஏரி
From Wikipedia, the free encyclopedia
சில்கா ஏரி, (Chilika Lake) கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும். சில்கா ஏரி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், கோர்த்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களின் எல்லைகளாகப் பிரிக்கிறது. இது வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் நீளத்தில பரந்துள்ளது. சில்கா ஏரியில் அமைந்த நளபனா தீவுப் பகுதியில் நளபனா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.[2][3]
சில்கா ஏரி Chilika Lake | |
---|---|
ஒடிசாவில் வங்காள விரிகுடாயை ஒட்டிய சில்கா ஏரியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 19°43′N 85°19′E |
ஏரி வகை | உவர் நீர் |
பூர்வீக பெயர் | "ଚିଲିକା ହ୍ରଦ" Error {{native name checker}}: parameter value is malformed (help) |
முதன்மை வரத்து | 52 நீரோடைகளுடன் பார்கவி ஆறு, தயா ஆறு, மக்ரா ஆறு, மலகுனி ஆறு மற்றும் லூனா ஆறுகள்[1] |
முதன்மை வெளியேற்றம் | பழைய கழிமுகம் அரகாகுடா, புது கழிமுகம் சதபதம், வங்காள விரிகுடா, ஒடிசா, இந்தியா |
வடிநிலப் பரப்பு | 3,560 சதுர கிலோ மீட்டர் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 64.3 கிலோ மீட்டர் |
மேற்பரப்பளவு | குறைந்தபட்சம்: 900 சதுர கிமீ அதிகபட்சம் சதுர 1165 கிமீ |
அதிகபட்ச ஆழம் | 4.2 மீட்டர்கள் |
நீர்க் கனவளவு | 4 km3 (3,200,000 acre⋅ft) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 0 – 2 m (6.6 அடி) |
Islands | 223 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பாதகுடா, கலிஜாய் மலை, பறவைகள் தீவு, கந்தபந்தா, கிருஷ்ணபிரசாத் (பழைய பரிகுடா), நளபானம், நுவாப்பரா, சாலமன் மற்றும் சனகுடா திவுகள் |
குடியேற்றங்கள் | புரி மற்றும் சதபரா |
மேற்கோள்கள் | [1] |
Invalid designation | |
தெரியப்பட்டது | 1 October 1981 |
1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.[4]
குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் சில்கா ஏரியில் பெரிய அளவில் வலசை வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சில்கா ஏரி புகலிடமாக உள்ளது.[5][6]
சில்கா ஏரியின் சூழலியல் மீன் வளத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது. சில்கா ஏரியின் கரையிலும், தீவுகளிலும் மீன்பிடித் தொழிலை நம்பி, 132 கிராமங்களைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள்.[7][8]
குளிர்காலத்தில் ருசியா, மங்கோலியா, நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, லடாக் மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து 160 பறவை இனங்கள் சில்கா ஏரிக்கு வலசை வருகின்றன.