சகுரா
From Wikipedia, the free encyclopedia
சகுரே (Sahure (also Sahura), பண்டைய எகிப்திய மொழியில் சகுரே என்பதற்கு சூரியக் கடவுளான இராவிற்கு நெருக்கமானவர் என்பது பொருள். இவர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 13 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 12 நாட்கள் ஆண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து அரசியல் மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கியது.[28][29][30] பார்வோன் யுசர்காப்பிற்கு பின்னர் ஆட்சி பீடம் ஏறிய அவரது மகனான சகுரே என்ற சகுராவிற்குப் பின்னர் நெபரிக்கரே ககாய் எகிப்தின் அரியனை ஏறினார்.
சகுரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சகு-ரே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 13 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 12 நாட்கள் கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்[note 1], ஐந்தாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | யுசர்காப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நெபரிக்கரே ககாய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | Meretnebty[24] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | Ranefer ♂ (ascended the throne as Neferirkare Kakai), Netjerirenre ♂ (possibly the same person as Shepseskare), Horemsaf ♂, Raemsaf ♂, Khakare ♂ and Nebankhre ♂[25][26] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | யுசர்காப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | நெபர்ஹெதெப்பிஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | சகுரேவின் பிரமிடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | சகுரேவின் பிரமிடு [27] Sun temple "The Field of Ra" Palaces "Sahure's splendor soars up to heaven" and "The crown of Sahure appears" |
இவரது ஆட்சியில் லெவண்ட் கடற்கரை பகுதி இராச்சியங்களுடன் வணிகம் மேற்கொண்டார். மேலும் தற்கால லெபனான் பகுதிகளை கடற்படை படகுகளுடன் சென்று கைப்பற்றினார். மேலும் பண்டு, லிபியா மற்றும் சினாய் பகுதிகளை படையெடுத்துக் கைப்பற்றினார். பார்வோன் சகுரா தன் ஆட்சியின் துவக்கத்திலே, தனக்கான சகுரா பிரமிடை அபுசிர் நகரத்தில் நிறுவினார்.