அபுசிர்
From Wikipedia, the free encyclopedia
அபுசிர் (Abusir (அரபு மொழி: ابو صير பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த நகரம் ஆகும். இந்நகரம் பண்டைய எகிப்தியக் கடவுள்களான ஒசிரிசுவின் இருப்பிடம் ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட் ஐந்தாம் வம்சத்தவர்கள் காலத்தில், அபுசிர் நகரத்தின் மேற்கில் இறந்த மன்னர்களின் கல்லறைகள் மற்றும் பிரமிடுகள் எழுப்பப்பட்டது.[1][2] 19ஆம் நூற்றாண்டில் இறுதியில் அபுசிர் நகரத்தின் தொல்லியல் அகழாய்வில் பழைய எகிப்திய இராச்சிய காலத்திய அபுசிர் பாபிரஸ் காகிதத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் அபுசிர், மாற்றுப் பெயர் ...
அபுசிர் | |
---|---|
மாற்றுப் பெயர் | பூசிரி |
இருப்பிடம் | எகிப்து |
பகுதி | கொய்ரோ ஆளுநரகம் |
ஆயத்தொலைகள் | 29.9°N 31.2°E / 29.9; 31.2 |
மூடு
மேலதிகத் தகவல்கள் பூசிரி படவெழுத்து முறையில் ...
பூசிரி படவெழுத்து முறையில் |
---|
மூடு
அபுசிர் தொல்லியல் மேட்டில் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தவர்களின் 14 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பெரும்பாலும் படிகள் பிரமிடுகள் ஆகும்.