மேல் எகிப்து
From Wikipedia, the free encyclopedia
மேல் எகிப்து (Upper Egypt) (அரபு மொழி: صعيد مصر என்பது பண்டைய எகிப்திற்கு தெற்கே உள்ள நூபியாவிற்கும், வடக்கே உள்ள கீழ் எகிப்திற்கும் இடையே பாயும் நைல் ஆற்றின் இருகரைப் பகுதிகளையும் குறிக்கும். மேல் எகிப்தின் முக்கிய நகரங்கள் தினீஸ், நெக்கென், தீபை மற்றும் நக்காடா ஆகும். கிமு 3150-இல் மேல் எகிப்தில் வரலாற்றுக்கு முற்பட்ட அரசமரபுகள் அழிந்து, எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் ஆட்சி துவங்கியது. இவ்வாட்சி கிமு 2686-இல் முடிவுற்றது. பின்னர் கிமு 2686 முதல் 2181 முடிய பழைய எகிப்து இராச்சியம் நிலவியது.
விரைவான உண்மைகள் மேல் எகிப்து, தலைநகரம் ...
மேல் எகிப்து | |||||||
---|---|---|---|---|---|---|---|
அறியப்படவில்லை–கிமு 3150 | |||||||
தலைநகரம் | தினீஸ் | ||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்தியம் | ||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
பார்வோன் | |||||||
• அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||
• கிமு 3150 | நார்மெர் (இறுதி) | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | அறியப்படவில்லை | ||||||
• முடிவு | கிமு 3150 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
மூடு
கீழ் எகிப்தின் காவல் தெய்வமான கடவுள் வத்செட்டும், மேல் எகிப்தின் கடவுளான நெக்பெட்டும் இரட்டைப் பெண்கள் என பண்டைய எகிப்தியர்கள் அழைத்தனர்.