மெடிநெத் அபு கோயில்
From Wikipedia, the free encyclopedia
மெடிநெத் அபு கல்லறைக் கோயில், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்ச மன்னர் மூன்றாம் ராமேசஸ் என்பவர் பண்டைய எகிப்து நாட்டின் அல்-உக்சுர் நகரத்தின் அருகே உள்ள மெடிநெத் அபு எனுமிடத்தில், தனக்காக கட்டிக்கொண்ட கல்லறைக் கோயில் ஆகும். இக்கோயிலில் மூன்றாம் ராமேசஸ் தனது ஆட்சிக் காலத்தில் (கிமு 1186 - கிமு 1155), பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர் பட்டியலை கற்பலகையில் குறுங்கல்வெட்டுகளாகப் பொறித்துள்ளார்.
விரைவான உண்மைகள் மெடிநெத் அபு கல்லறைக் கோயில், இருப்பிடம் ...
மெடிநெத் அபு கல்லறைக் கோயில் | |
---|---|
புது எகிப்து இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் ராமேசேசின் கல்லறைக் கோயில் | |
இருப்பிடம் | மெடிநெத் அபு, எகிப்து |
ஆயத்தொலைகள் | 25°43′10.92″N 32°36′2.52″E |
வகை | கல்லறைக் கோயில் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1859 மற்றும் 1899 |
மூடு
எகிப்தில் மெடிநெத் அபு எனுமிடத்தில் உள்ள மூன்றாம் ராமேசஸ் தனக்காக நிறுவிய இக்கல்லறைக் கோயிலை ஐரோப்பிய தொல்லியல் அறிஞர் விவான்ட் டெனொன் என்பவர் 1799-1801-களில் பார்வையிட்டார். 1859 மற்றும் 1899 ஆண்டுகளில் இக்கல்லறைக் கோயில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.