மலேசிய ஒப்பந்தம்
மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்க செய்து கொண்ட ஒப்பந்தம் / From Wikipedia, the free encyclopedia
மலேசிய ஒப்பந்தம் (ஆங்கிலம்: Malaysia Agreement (MA63); மலாய்: Perjanjian Malaysia சீனம்: 马来西亚协定) என்பது ஐக்கிய இராச்சியம் (United Kingdom of Great Britain), வடக்கு அயர்லாந்து (Northern Ireland), மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya), வடக்கு போர்னியோ (North Borneo), சரவாக் (Sarawak) மற்றும் சிங்கப்பூர் (Singapore) ஆகிய நிலப்பகுதிகள்; மலேசியா எனும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தமாகும்.[3]
ஐக்கிய இராச்சியம், வடக்கு அயர்லாந்து, மலாயா கூட்டமைப்பு, வடக்கு போர்னியோ, சரவாக், சிங்கப்பூர் நிலப் பகுதிகளுக்கு இடையே மலேசியா தொடர்பான ஒப்பந்தம் | |
---|---|
மலேசியா தொடர்பான ஒப்பந்தம் | |
வரைவு | 15 நவம்பர் 1961 |
கையெழுத்திட்டது | 9 சூலை 1963 |
இடம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
முத்திரையிட்டது | 31 சூலை 1963 |
நடைமுறைக்கு வந்தது | 16 செப்டம்பர் 1963 |
கையெழுத்திட்டோர் | |
தரப்புகள் |
|
வைப்பகம் |
|
மொழிகள் | ஆங்கிலம், மலாய் |
முழு உரை | |
Agreement relating to Malaysia between United Kingdom of Great Britain and Northern Ireland, Federation of Malaya, North Borneo, Sarawak and Singapore விக்கிமூலத்தில் முழு உரை |
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo); பிரித்தானிய சரவாக் முடியாட்சி (Crown Colony of Sarawak); சிங்கப்பூர் காலனி (Colony of Singapore); மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) ஆகிய நிலப்பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அந்த ஒன்றிணைப்பின் மூலமாக மலேசியா (Malaysia) எனும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.[4][5]