பொன்னாங் கழுகு
From Wikipedia, the free encyclopedia
பொன்னாங் கழுகு (Golden Eagle) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களில் வல்லுகிர்களும் (உகிர் = நகம்) உண்டு. விலங்கின் தசையைக் குத்திக் கிழிக்க கூரிய நுனி உடைய வளைந்த அலகு உண்டு.
பொன்னாங்கழுகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Accipitridae |
பேரினம்: | Aquila |
இனம்: | A. chrysaetos |
இருசொற் பெயரீடு | |
Aquila chrysaetos L, 1758 | |
பொன்னாங்கழுகின் புவியியற்பரம்பல் இளம்பச்சை = கூடுகட்டும் பகுதி நீலம் = குளிர்காலத்தில் இருக்குமிடங்கள் கரும்பச்சை = ஆண்டு முழுதும் இருக்குமிடங்கள் |
இப்பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் அருகி இருந்தன. இவை ஒரு காலத்தில் ஐரோப்பாவிலும், வட ஆசியப் பகுதிகளிலும் வட ஆப்பிரிக்க, சப்பான் நாடுகளிலும் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பறவைகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளிலேயே கூடு கட்டி வழ்ந்து வருகின்றன. இப்பறவைகளை கசக்ஸ்தான் போன்ற நாடுகளில் சிறு விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கழுகுகளைப் பழக்குவதற்கு, கழுகுப்பயிற்சி என்று பெயர்.