முதுகுநாணி
From Wikipedia, the free encyclopedia
முதுகுநாணிகள் (இலங்கை வழக்கு - முண்ணாணிகள்) (Chordates) என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு அல்லது தொகுதி. இத் தொகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் கருவிலிருந்து வளர்ச்சி பெறும்பொழுது ஒருநிலையில் உடலின் அச்சு போன்ற ஒரு முதுகு நாண் கொண்டிருக்கும். இதனாலேயே இவற்றிற்கு முதுகுநாணி என்று பெயர்.
முதுகுநாணி (Chordates) புதைப்படிவ காலம்:கேம்பிரியன் – அண்மை | |
---|---|
ப்ரிஸ்டெல்லா மேக்ஸில்லாரிஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
துணைத்திணை: | யூமேட்டாசோவா (Eumetazoa) |
பெருந்தொகுதி: | டியூட்டெரோஸ்டோமியா (Deuterostomia) |
தரப்படுத்தப்படாத: | இருபக்கமிகள் (Bilateria) |
தொகுதி: | முதுகுநாணி (Chordata) வில்லியம் பேட்ஸன் (William Bateson), 1885 |
வகுப்புகள் | |
See below |
இந்த விலங்கினத் தொகுதி (phylum) மூன்று துணைத்தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன:
- டியுனிக்கேட் (tunicate) அல்லது உரோகோர்டேட்டா (Urochordata) எனப்படும் அடுக்கிதழ் கடல் வடிகட்டி உறிஞ்சான்கள்
- லான்செலெட் (lancelet) அல்லது தலைகொள் முதுகுநாணிகள் (Cephalochordata)
- முதுகெலும்பிகள் (vertebrate)
உரோகோர்டேட்டா என்னும் அடுக்கிதழ் வடிகட்டி உறிஞ்சான்களின் புழுநிலையில் முதுகுநாணும், நரம்புகள் கற்றையும் உண்டு ஆனால் அவை முழு வளர்ச்சி அடைந்தவுடன் மறைந்துவிடுகின்றன. தலைகொள் முதுகுநாணிகளுக்கு அச்சுபோன்ற முதுநாணும், தண்டுவடம் போன்ற நரம்புக்கற்றையும் உண்டு, ஆனால் முள்ளெலும்பாகிய முதுகெலும்பு கிடையாது. மண்டை ஓடு உள்ள ஆனால் முதுகெலும்பில்லா ஆரல்மீன்வகை போன்ற ஹாகுமீன் (Hagfish) தவிர மற்றெல்லா முதுகெலும்பிகளிலும் முதுகில் நரம்புக்கற்றைக்கான (தண்டுவடம்) குழாய் போன்ற பகுதியைச் சுற்றி குருத்தெலும்போ முள்ளெலும்போ வளர்ந்திருக்கும்.
தற்பொழுது உயிர்வாழும் முதுகுநாணிகளுக்குத் தொடர்பான கிளை உயிரினங்களை கீழே உள்ள வகைப்பாட்டுக் கிளைப்படம் காட்டும். இதில் காட்டப்பட்டுள்ள சில உயிரின வகைப்பாட்டு உறுப்பினங்கள் மரபுவழியான வகுப்புகளுடன் இணங்கி இருப்பதில்லை. மிகப்பரவலான முதுகுநாணிகளை ஒழுங்குடன் வகைப்படுத்துவதில் இன்னமும் குழப்பங்கள் உள்ளன. ஒரு சில உயிரினங்களுக்கிடையே உள்ள உறவுகளும் தெளிவாகவில்லை.