நீலகிரி வரையாடு
From Wikipedia, the free encyclopedia
நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு[1] என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.
விரைவான உண்மைகள் நீலகிரி வரையாடு, காப்பு நிலை ...
நீலகிரி வரையாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caprinae |
பேரினம்: | Hemitragus |
இனம்: | H. hylocrius |
இருசொற் பெயரீடு | |
ஹெமிடிராகஸ் ஹய்லோசிரியஸ் (Nilgiritragus hylocrius) (Ogilby, 1838) | |
மூடு