தகைவிலான் குருவி
பறவைகளின் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
தகைவிலான்கள் மற்றும் மார்ட்டின்கள், அல்லது ஹிருன்டினிடே ஆகியவை பேஸ்ஸரின் குடும்பப் பறவைகளாகும். இவை அனைத்துக் கண்டங்களிலும் (எதேச்சையாக அண்டார்டிகா கண்டத்திலும்) காணப்படுகின்றன. இவை பறக்கும் பொழுதே உணவைப் பிடிக்கவும், உண்ணவும் ஏற்ற உடல் அமைப்பு உள்ளதால் இந்த பெயரை கொண்டுள்ளது. இவை ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. இக்குடும்பத்தில் 19 பேரினங்களில் 90 உயிரினங்கள் உள்ளன. இவை ஆப்பிரிக்காவில் அதிக வகைகளில் காணப்படுகின்றன. அங்குதான் இவை துளை-கூடுகளை அமைக்கும் வகையில் பரிணாமம் அடைந்ததாகக் கருதப்படுகிறது. இவை பல பெருங்கடல் தீவுகளிலும் காணப்படுகின்றன. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க இனங்கள் நீண்ட தூரம் வலசை போகக் கூடியவையாகும். மாறாக, மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்க தகைவிலான்கள் வலசை போவதில்லை.
தகைவிலான் | |
---|---|
பின் சிவப்பு தகைவிலான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
Suborder: | பசாரி |
குடும்பம்: | தகைவிலான் குருவி |
இக்குடும்பத்தில் இரண்டு துணை குடும்பங்கள் உள்ளன: சூடோசெலிடோனினே (சூடோசெலிடோன் பேரினத்தின் ஆற்று மார்ட்டின்கள்) மற்றும் ஹிருன்டினினே (மற்ற அனைத்து தகைவிலான்கள், மார்ட்டின்கள் மற்றும் இரம்ப- இறக்கைகள்). பழைய உலகத்தில் மார்ட்டின் என்ற பெயர் சதுர-வால் இனங்களுக்கும், தகைவிலான் என்ற பெயர் முள்-வால் இனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது; எனினும் அறிவியல் ரீதியாக இந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் வேறுபாடு கிடையாது.[3] புதிய உலகத்தில் "மார்ட்டின்" என்ற பெயர் ப்ரோக்னே பேரினத்தின் உறுப்பினர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. (இந்த இரு அமைப்புகள் காரணமாகவே மண் மார்ட்டின் புதிய உலகத்தில் "கரை தகைவிலான்" என்று அழைக்கப்படுகிறது.)