செந்தலைக் கொக்கு
From Wikipedia, the free encyclopedia
செம்முடிக் கொக்கு என்பது கொக்குகள் அனைத்தினும் மிகப்பெரிய கொக்கு. இது சப்பான் கொக்கு, மஞ்சூரியக் கொக்கு என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. கொக்கினங்களில் இதுவே இரண்டாவது அரிதான கொக்கு. நன்கு வளர்ந்த நிலையில் இதன் உடல் வெண்ணிறமாகவும் இதன் தலையில் உள்ள தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவை கோபமான நிலையிலோ அல்லது உணர்ச்சிவயப்பட்ட நிலையிலோ இருக்கையில் இச்சிவப்பு நிறமானது மேலும் சிவந்து காணப்படும்.
விரைவான உண்மைகள் செந்தலைக் கொக்கு, காப்பு நிலை ...
செந்தலைக் கொக்கு | |
---|---|
சப்பான் கொக்கிடோவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | குருயிடே |
பேரினம்: | குருசு |
இனம்: | கு. சப்பானென்சிசு |
இருசொற் பெயரீடு | |
குருசு சப்பானென்சிசு (முல்லர், 1776[மேற்கோள் தேவை]) | |
மூடு
இந்த இனம் அளவில் பெரிய கொக்கினங்களுள் ஒன்று. சராசரியாக 158 செ.மீ உயரமும் 7.7 முதல் 10 கிலோ எடையும் இருக்கும்.