ஐரோப்பிய ராபின்
From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பிய ராபின் (European robin) அல்லது ஐரோப்பிய ரொபின் (இலங்கை வழக்கு) என்பது, பூச்சியுண்ணும், மரக்கிளைகளில் தங்கும், ஒரு சிறிய பறவை. மார்பு செந்நிறமாக இருப்பதால் இதைப் பிரித்தானியத் தீவுகளில் ராபின் ரெட்பிரெஸ்ட் எனவும் அழைப்பர். இது முன்னர் "திறசு" (thrush) குடும்பத்தில் (தேர்டிடே) வகைப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இது ஒரு பழைய உலக ஈபிடிப்பான் எனக் கருதப்படுகிறது. இது 12.5-14.0 சமீ (5.0-5.5 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் ஆண், பெண் இரு பாலினப் பறைவைகளும் ஒரே விதமான நிறம் கொண்டவை. செம்மஞ்சள் நிற மார்பைக் கொண்ட இவற்றின் முகத்தில் சாம்பல் நிறக் கோடுகள் இருக்கும். முதுகு மண்ணிறமாகவும், வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமாகவும் காணப்படும். இது, கிழக்கில் மேற்கு சைபீரியா வரையும், தெற்கில் வட ஆப்பிரிக்கா வரையும் உள்ள ஐரோப்பாக் கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றது. தூர வடக்குப் பகுதிகளில் வாழும் சி வகைகளைத் தவிர இதன் ஏனைய வகைகள் இடப்பெயர்வு இல்லாமல் ஒரே பகுதியிலேயே வாழ்கின்றன.
ஐரோப்பிய ராபின் | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் லங்காசயரில் ஐரோப்பிய ராபின் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரிபார்மசு |
குடும்பம்: | |
பேரினம்: | எரித்தாகசு கூவியர், 1800 |
இனம்: | எ. ருபெக்குலா |
இருசொற் பெயரீடு | |
எரித்தாகசு ருபெக்குலா (லின்னேயசு, 1758) | |
துணையினம் | |
7–10, see text. | |
உலக எல்லை ஆண்டு முழுவதுமான எல்லை கோடை எல்லை மாரி எல்லை |
செம்மஞ்சள் நிற மார்பையுடைய, ஆனால் வேறு குடும்பங்களைச் சேர்ந்த சில பறவைகளையும் "ராபின்" என்னும் பெயரால் அழைப்பது உண்டு. "திரசு" குடும்பத்தைச் சேர்ந்த "அமெரிக்க ராபின்" (தேர்டசு மைகிரேட்டேரியசு (Turdus migratorius)), "பெட்ரோயிசைடே" குடும்பத்தைச் சேர்ந்த ஆசுத்திரேலிய ராபின் போன்றவை இத்தகையவை. இவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்துத் தெளிவில்லை.