இயூரோன் ஏரி
From Wikipedia, the free encyclopedia
இயூரோன் ஏரி (Lake Huron) வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளில் ஒன்றாகும் . நீரியலின்படி, இது மிச்சிகன்-ஹுரோன் ஏரியின் கிழக்குப் பகுதியாகும்; இதன் மேற்கிலுள்ள மிச்சிகன் ஏரியுடன் 5-மைல்-அகலமுள்ள (8.0 கிமீ), 20-பதாம்-ஆழமுள்ள (120 அடி; 37 மீ) மக்கினாக் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் வடக்கிலும் கிழக்கிலும் கனடாவின் ஒன்றாரியோ மாநிலமும் தெற்கிலும் மேற்கிலும் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலமும் உள்ளது. இந்த ஏரிக்கு துவக்க கால பிரான்சிய நாடுகாண் தேடலறிஞர்கள் இப்பகுதியில் வசித்து வந்த இயூரோன் மக்கள் பெயரைச் சூட்டினர்.
இயூரோன் ஏரி | |
---|---|
இயூரோன் ஏரியின் கரைத்தோற்றம் | |
இயூரோன் ஏரி, மற்ற பேரேரிகளின் நிலப்படம் | |
அமைவிடம் | வட அமெரிக்கா |
குழு | அமெரிக்கப் பேரேரிகள் |
ஆள்கூறுகள் | 44.8°N 82.4°W / 44.8; -82.4 |
ஏரி வகை | பனிப்பாறை ஏரி |
முதன்மை வரத்து | மக்கினாக் நீரிணை, புனித மேரி ஆறு |
முதன்மை வெளியேற்றம் | புனித கிளையர் ஆறு |
வடிநிலப் பரப்பு | 51,700 sq மை (134,100 கிமீ2)[1] |
வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா, கனடா |
அதிகபட்ச நீளம் | 206 mi (332 km)[1] |
அதிகபட்ச அகலம் | 183 mi (295 km)[1] |
மேற்பரப்பளவு | 23,007 sq மை (59,588 கிமீ2)[1] |
சராசரி ஆழம் | 195 அடி (59 m)[1] |
அதிகபட்ச ஆழம் | 750 அடி (229 m)[1] |
நீர்க் கனவளவு | 850 cu mi (3,543 km3)[1] |
நீர்தங்கு நேரம் | 22 ஆண்டுகள் |
கரை நீளம்1 | 1,850 mi (2,980 km) + தீவுகளுக்காக 1,980 mi (3,190 km)[2] |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 577 அடி (176 m)[1] |
Islands | மனிட்டூலின் தீவு |
பிரிவுகள்/துணைப் பகுதிகள் | ஜியார்ஜியன் விரிகுடா, வடக்குக் கால்வாய் |
குடியேற்றங்கள் | மிச்சிகன் மாநிலத்தில் பே நகரம், அல்பேனா, செபோய்கன், புனித இக்னேசு, இயூரோன் துறைமுகம்; ஒண்டாரியோவில் காட்ரிச், சார்னியா |
மேற்கோள்கள் | [3] |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
இந்த ஏரிப்பகுதியில் கிடைத்த சான்றுகளை வைத்தே இயூரோன் உறைபனிப்பரவலுக்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. ஏரியின் வடக்குப் பகுதிகளில் வடக்குக் கால்வாயும் ஜியார்ஜியன் விரிகுடாவும் அடங்கும். தென்மேற்கே ஏரிக்கு எதிரே சாகினா விரிகுடா உள்ளது. புனித மேரி ஆறு முதன்மையான நீர் வரத்து ஆகும்; முதன்மையான வெளியேற்றுகை புனித கிளையர் ஆறாகும்.