ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம்
சுவீடன் நாட்டு இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (Anders Jonas Ångström, 1814 - 1874 ), ஒரு சுவீடன் நாட்டு இயற்பியலாளர். உப்சாலா பல்கலைக்கழகத்தில் நிறமாலையியல் துறையில் முன்னோடியாக இருந்தவர்.[1] “வெப்பப்படுத்தப்பட்ட ஒரு வளிமம் ( gas ) எந்த அலைநீளங்களில் ஒளியை உமிழுமோ அதே அலைநீளங்களை குறைவான வெப்பநிலையில் உள்ளபோது அவ்வளிமம் உட்கவரும்” என்ற உண்மையை 1855 -ஆம் ஆண்டு கண்டறிந்தார்; இதை நான்காண்டுகளுக்குப் பின்னர் கீர்காஃப் ( Kirchoff ) ஆய்வுகளின் மூலம் உறுதி செய்தார். 1861- இல் ப்ரான்ஹோபர் வரிகளை ஆய்வு செய்ததில் சூரியனில் ஹைட்ரசன் உள்ளதை உறுதி செய்தார். ஆங்ஸ்ட்ராம் தன் அளவிடுதல்களை 10 −10 மீ அளவுகளில் செய்தார்; பின்னாளிலே, அவரை கவுரவப்படுத்தும் விதமாக 10 −10 மீ = 1 Å என்ற அலகு ஏற்படுத்தப்பட்டது. துருவ ஒளியின் நிறமாலையியல் பற்றியும் தன் ஆய்வுகளைச் செய்துள்ளார் ஆங்ஸ்டிராம்.[2]
ஆண்டர்சு யோனாஸ் ஆங்ஸ்டிராம் | |
---|---|
ஆண்டர்சு யோனாஸ் ஆங்ஸ்டிராம் | |
பிறப்பு | (1814-08-13)ஆகத்து 13, 1814 சுவீடன் |
இறப்பு | சூன் 21, 1874(1874-06-21) (அகவை 59) சுவீடன் |
குடியுரிமை | சுவீடன் |
துறை | இயற்பியலாளர் |
கல்வி கற்ற இடங்கள் | உப்சாலா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நிறமாலையியல் |
விருதுகள் | ரம்போர்டு பதக்கம் |