வியட்நாம்
தென்கிழக்கு ஆசிய நாடு / From Wikipedia, the free encyclopedia
வியட்டுநாம் (/ˌviːətˈnɑːm/ (கேட்கⓘ), /viˌɛt-/, /-ˈnæm/, /ˌvjɛt-/;[1] வார்ப்புரு:IPA-vi), அல்லது உத்தியோகபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (SRV; Cộng hòa Xã hội chủ nghĩa Việt Nam (listenⓘ)), என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.[2] 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வியட்னாம் சமவுடைமைக் குடியரசு Cộng hòa Xã hội Chủ nghĩa Việt Nam | |
---|---|
குறிக்கோள்: Độc lập - Tự do - Hạnh phúc "விடுதலை - சுதந்திரம் - மகிழ்ச்சி" | |
நாட்டுப்பண்: Tiến Quân Ca | |
தலைநகரம் | ஹனோய் |
பெரிய நகர் | ஹோ சி மின் நகரம் |
ஆட்சி மொழி(கள்) | வியட்நாமிய மொழி |
அரசாங்கம் | சோசலிசக் குடியரசு |
• ஜனாதிபதி | ஙுயென் மின் ட்ரியெட் |
• தலைமை அமைச்சர் | ஙுயென் டான் டுங் |
• செயலாளர் நாயகம், கம்யூனிஸ்ட் கட்சி | நொங் டுக் மான் |
விடுதலை பிரான்சிடம் இருந்து | |
• தேதி | செப்டம்பர் 2, 1945 |
• அங்கீகாரம் பெற்றது | 1954 |
பரப்பு | |
• மொத்தம் | 331,689 km2 (128,066 sq mi) (65வது) |
• நீர் (%) | 1.3 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 85,238,000 (13வது) |
76,323,173 | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $251.8 பில்லியன் (36வது) |
• தலைவிகிதம் | $3,025 (123வது) |
ஜினி (2002) | 37 மத்திமம் · 59வது |
மமேசு (2004) | 0.709 உயர் · 109வது |
நாணயம் | டொங் (₫) (VND) |
நேர வலயம் | ஒ.அ.நே+7 |
ஒ.அ.நே+7 | |
அழைப்புக்குறி | 84 |
இணையக் குறி | .vn |
கி.பி. 938ல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்கு தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் சப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர். அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது.
வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது.[3] 2000ம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு,[3] 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது.[4] இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக வணிக அமைப்பில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.[5][6][7][8][9]