ஹனோய்
From Wikipedia, the free encyclopedia
ஹனோய் (ஒலிப்புⓘ) வியட்நாமின் தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 2009 மதிப்பீட்டின்படி இதன் நகர்ப்புறச் சனத்தொகை 2.6 மில்லியனும்,[1] புறநகர்ச் சனத்தொகை 6.5 மில்லியனும் ஆகும்.[2] 1010இலிருந்து 1802வரை, வியட்நாமின் முக்கிய அரசியல் மையமாகவும் திகழ்ந்தது. ஙுயென் வம்ச (1802–1945) ஆட்சிக்காலத்தில் ஆட்சித் தலைநகர் ஹூ நகருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1902இலிருந்து 1954 வரை பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகராக ஹனோய் செயற்பட்டது. 1954இலிருந்து 1976வரை வட வியட்நாமின் தலைநகராகவும், 1976இல் வியட்நாம் போரில் வடவியட்நாமின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்றிணைந்த வியட்நாமின் தலைநகராகவும் செயற்பட்டது.
ஹ னோய்
ஹ னோய் | |
---|---|
மாநகர சபை | |
வியட்நாமில் அமைவிடம் | |
நாடு | வியட்நாம் |
மத்திய நகர் | ஹ னோய் |
தாய் வியெட்டின் தலைநகராக உருவாக்கம் | 1010 |
வியட்நாமின் தலைநகர் | செப்டெம்பர் 2, 1945 |
இடப்பெயர் | ஹனோயர் |
அரசு | |
• கட்சிச் செயலாளர் (பி து தான் உய்) | பாம் காங் கி |
• மக்கள் சபைத் தலைவர் (சு டிச் ஹோய் தொங் ஹான் தான்) | ஙோ தி தோன் தான் |
• மக்கள் குழுத் தலைவர் (சு டிச் உய் பான் ஹான் தான்) | ஙுயென் தே தாஒ |
பரப்பளவு | |
• மாநகர சபை | 3,344.7 km2 (1,291.4 sq mi) |
• நகர்ப்புறம் | 186.22 km2 (71.90 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• மாநகர சபை | 65,00,000 |
• தரவரிசை | வியட்நாமில் 2வது |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (ICT) |
இணையதளம் | hanoi.gov.vn |
இந்நகரம் செவ்வாற்றின் வட கரையில் அமைந்துள்ளது. ஹனோய் நகர், ஹோ சி மின் நகருக்கு வடக்கே 1,760 km (1,090 mi) தொலைவிலும், ஹாய் ஃபோங் நகருக்கு மேற்கே 120 km (75 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.
ஒக்டோபர் 2010ல் இந்நகர் நிறுவப்பட்டதன் ஆயிரம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.[3] இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் விதத்தில் 4கிமீ நீளமுடைய ஹனோய் பீங்கான் புடைப்புச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
2019 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்நகரத்திலேயே நடத்தப்படவுள்ளன.