ஹோ சி மின்
From Wikipedia, the free encyclopedia
ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஓ சி மின்Hồ Chí Minh, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுத் தலைவர் ...
ஓ சி மின் Hồ Chí Minh | |
---|---|
胡志明 | |
தனியுருவப் படம் அண். 1946 | |
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுத் தலைவர் | |
பதவியில் 19 பெப்ரவரி 1951 – 2 செப்டம்பர் 1969 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எவருமில்லை |
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1 நவம்பர் 1956 – 10 செப்டம்பர் 1960 | |
முன்னையவர் | டுரோங் சின் |
பின்னவர் | லே துவான் |
வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் | |
பதவியில் 2 செப்டம்பர் 1945 – 2 செப்டம்பர் 1969 | |
முன்னையவர் | புதிய பதவி பாவோ தாய் (பேரரசராக) |
பின்னவர் | தோன் டூக் தாங் |
வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1வது பிரதமர் | |
பதவியில் 2 செப்டம்பர் 1945 – 20 செப்டம்பர் 1955 | |
முன்னையவர் | புதிய பதவி திரான் துரோங் கிம் (வியட்நாம் பேரரசின் பிரதமராக) |
பின்னவர் | பாம் வான் தோங் |
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 28 ஆகத்து 1945 – 2 மார்ச் 1946 | |
பின்னவர் | நியூவென் துவோங் தாம் |
பதவியில் 28 ஆகத்து 1946 – மார்ச் 1947 | |
முன்னையவர் | நியூவென் துவோங் தாம் |
பின்னவர் | ஓவாங் மின் கியாம் |
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழுவின் உறுப்பினர் | |
பதவியில் 31 மார்ச் 1935 – 2 செப்டம்பர் 1969 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நியூவென் சின் குங் (1890-05-19)19 மே 1890 கிம் லியேன், நியே ஆன் மாகாணம், பிரெஞ்சு இந்தோசீனா |
இறப்பு | 2 செப்டம்பர் 1969(1969-09-02) (அகவை 79) ஹனோய், வடக்கு வியட்நாம் |
தேசியம் | வியட்நாமியர் பிரெஞ்சு |
அரசியல் கட்சி | தொழிலாழர் அகிலத்தின் பிரெஞ்சுப் பகுதி (1919-1921) பிரெஞ்சுக் கம்யூனிசக் கட்சி (1921-1925) வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (1925-1969) |
துணைவர் | எவருமில்லை |
பிள்ளைகள் | எவருமில்லை |
பெற்றோர் | நியூவென் சின் சாக் (தந்தை) ஒவாங் தி லோவான் (தாய்) |
முன்னாள் கல்லூரி | கம்யூனிசப் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
கையெழுத்து | |
மூடு
ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.