வண்ணந்தீட்டிய ஆமை
From Wikipedia, the free encyclopedia
வண்ணந்தீட்டிய ஆமை (உயிரியல்:Chrysemys picta, ஆங்கிலம்:Painted turtle) என்பது, வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் நீர்வாழ் ஆமை வகையைச் சார்ந்த உயிரனம் ஆகும். எனவே, இது மெதுவாக நகரும் நன்னீர் ஓட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வட அமெரிக்காவில், தெற்குக் கனடா தொடங்கி லூசியானா வரையும், வட மெக்சிகோவிலும், பசிபிக் பெருங்கடலிலும், அட்லாண்டிக் கடலிலும் பரவலாக வாழ்கின்றன. இவை செரிசெமைசு (Chrysemys) என்ற பேரினத்தின் ஒரேயொரு வாழ்நிலை இனமாகும். குள நீராமைக் (Emydidae) குடும்பத்தின் சிறு பகுதியாக, இப்பேரினம் விளங்குகிறது. தொல்லுயிர்ப் புதை படிவுகளின் படி, இந்த உயிரினம் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்னமே வாழ்ந்ததாகக் கண்டறிந்துள்ளனர். கடைசி பனியக் காலத்தில் (Last glacial period), இந்த இனத்தின், நால்வகைச் சிற்றினங்கள், வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு, மேற்கு, தெற்கு, நடு பகுதிகளில் தோன்றியதாக, உயிரியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வண்ணந்தீட்டிய ஆமை புதைப்படிவ காலம்:15–0 Ma Neogene–Holocene[1] | |
---|---|
மேற்கத்திய வண்ணந்தீட்டிய ஆமை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | மறைகழுத்துள்ளவை |
குடும்பம்: | நன்னீர் ஆமை |
பேரினம்: | Chrysemys |
இனம்: | picta |
Subspecies | |
C. p. bellii[3] | |
வேறு பெயர்கள் [4] | |
Species synonymy[5]
|