மிச்சிகன் ஏரி
From Wikipedia, the free encyclopedia
மிச்சிகன் ஏரி (Lake Michigan) வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று. இது மட்டுமே முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப்பகுதிக்குள் அமைந்ததாகும். மற்ற நான்கு பேரேரிகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா இருநாட்டுப் பகுதிகளிலும் உள்ளன. பேரேரிகளில் இது கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியன. (இந்த ஏரி சிறிதளவே ஐக்கிய அமெரிக்க மாநிலம் மேற்கு வர்ஜீனியாவைச் சிறியது). கிழக்கில் இந்த ஏரியின் வடிநிலத்தில் இயூரோன் ஏரியும் பரந்த மக்கினாக் நீரிணை மூலம் இணைந்துள்ளது. ஒரே மேற்பரப்பு உயரத்தைக் கொண்டுள்ளதால் இவை இரண்டும் ஒரே ஏரி எனலாம்.[4]
மிச்சிகன் ஏரி | |
---|---|
லாண்ட்சட் படிமம் | |
அமெரிக்கப் பேரேரிகளின் நிலப்படம் (மிச்சிகன் ஏரி அடர்நீலத்தில் உள்ளது) | |
அமைவிடம் | ஐக்கிய அமெரிக்கா |
குழு | அமெரிக்கப் பேரேரிகள் |
ஆள்கூறுகள் | 44°N 87°W |
ஏரி வகை | பனிப்பாறை ஏரி |
முதன்மை வரத்து | பாக்சு ஆறு, கிராண்டு ஆறு, மெனோமினீ ஆறு, மில்வாக்கி ஆறு, முஸ்கேகோன் ஆறு, கலாமசூ ஆறு, புனித யோசப்பு ஆறு |
முதன்மை வெளியேற்றம் | மக்கினாக்கு நீரிணை, சிக்காகோ ஆறு, கலுமெட் ஆறு |
வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா |
அதிகபட்ச நீளம் | 307 mi (494 km) |
அதிகபட்ச அகலம் | 118 mi (190 km) |
குறைந்தபட்ச அகலம் | 91 mi (146 km) |
மேற்பரப்பளவு | 22,404 sq mi (58,030 km2)[1] |
சராசரி ஆழம் | 279 அடி (85 m) |
அதிகபட்ச ஆழம் | 923 அடி (281 m)[2] |
நீர்க் கனவளவு | 1,180 cu mi (4,900 km3) |
நீர்தங்கு நேரம் | 99 ஆண்டுகள் |
கரை நீளம்1 | 1,400 mi (2,300 km) + தீவுகளுக்காக 238 mi (383 km)[3] |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 577 அடி (176 m)[2] |
Islands | காண்க பட்டியல் |
குடியேற்றங்கள் | காண்க #நகரங்கள் |
மேற்கோள்கள் | [2] |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
மிச்சிகன் ஏரியின் மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கொன்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இதன் கரையோரமாக அமைந்துள்ள துறைமுகங்களில் சிகாகோ; மில்வாக்கி; கிரீன் பே, விசுகான்சின்; கேரி, இந்தியானா; மற்றும் மஸ்கெகோன், மிச்சிகன் அடங்கும். "மிச்சிகன்" என்ற சொல் துவக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூர் ஒஜிப்வெ மொழியில் பெரும் நீர் என்ற பொருள்தரும் மிச்சி காமி என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம்.[5]