நினிவே
From Wikipedia, the free encyclopedia
நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட்ட வடக்கு மெசொப்பொத்தேமியா நகரம் ஆகும். பண்டைய நினிவே நகரம் தற்போது ஈராக் நாட்டின் வடக்கில் உள்ள நினிவே ஆளுநகரகத்தில் உள்ள மோசுல் நகரத்திற்கு வடமேற்கே 2.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது டைகிரிசு ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளது. நினிவே நகரம் கிமு 911 முதல் கிமு 609 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
நினிவே ܢܝ݂ܢܘܹܐ | |
---|---|
பச்சை நிறத்தில் அசிரியாவும், அதன் தலைநகரம் நினிவே நகரம் | |
இருப்பிடம் | மோசுல், நினிவே மாகாணம், ஈராக் |
பகுதி | மேல் மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 36°21′34″N 43°09′10″E |
வகை | நகரம் |
பரப்பளவு | 7.5 சகிமீ (2.9 சதுர மைல்) |
வரலாறு | |
பயனற்றுப்போனது | கிமு 612 |
நிகழ்வுகள் | நினிவே போர், கிமு 612 |
புது அசிரியப் பேரரசு காலத்தில், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக நினிவே நகரம் விளங்கியது.[1] புது அசிரியப் பேரரசில் கிமு 627ல் நடைபெற்ற அசிரியர்களுக்கு எதிரான நினிவே நகரத்தில் நடைபெற்ற போரில், பாபிலோனியர்கள், மீடியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள் மற்றும் சிதியர்கள் நினிவே நகரத்தை தாக்கி அழித்தனர். பின்னர் கிமு 626ல் சால்டியர்கள் புது பாபிலோனியப் பேரரசை நிறுவினர்.
புது அசியரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் சிதிலங்கள், நினிவே மாகாணத்தின் ஆளுநகரத்தில் உள்ள மோசுல் நகரம் அருகே உள்ள ஆற்றின் கரையில் இன்றும் காணப்படுகிறது. நினிவே நகரத்தின் தொல்லியல் மேடுகள் மற்றும் வடக்கு அரண்மனை தொல்லியல் களங்களிலிருந்து அசிரியப் பேரரசின் சிற்பங்கள் கிடைத்துள்ளது. நினிவே தொல்லியல் களங்களிலிருந்து கண்டெடுத்த தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.