ஈயம்
From Wikipedia, the free encyclopedia
ஈயம் (ஒலிப்புⓘ) (Lead) ஒரு வேதியியல் உலோகம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Pb. இதன் அணுவெண் 82. இது ஒரு மென்மையான உலோகம் அகும். இது தட்டாக்கக்கூடிய பார உலோகமாகும். இது வளியுடன் இலகுவில் தாக்கமடைவதால் இதன் மீது காணப்படும் ஒக்சைட்டுப் படை இதனை அழகற்ற சாம்பல் நிறப்பொருளாகக் காட்டும். எனினும் வெட்டியவுடன் வெள்ளி போல பளபளக்கும். இதுவே மிகவும் அதிக திணிவுடைய கருவுள்ள நிலைப்புத்தன்மையுடைய (கதிர்த்தொழிற்பாற்ற) தனிமமாகும். இதற்கு அணுவெண்ணில் அடுத்ததாக உள்ள பிஸ்மத் முன்னர் மிகப்பாரமான கதிர்த்தொழிற்பாடற்ற தனிமம் எனக் கருதப்பட்ட போதிலும், பின்னர் பிஸ்மத் சொற்பளவு கதிரியக்கத்தைக் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது. எனவே ஈயமே நிலையான ஆனால் மிகவும் பாரமான கருவுடைய தனிமமாகும். பிஸ்மத்தின் அரை-வாழ்வுக்காலம் பிரபஞ்சத்தின் வயதை விடவும் பல மடங்கு அதிகமாகையால், பிஸ்மத்தே மிகவும் பாரமான ஆனால் நிலையான கருவுடைய தனிமம் என்ற வாதமும் பொது வழக்கில் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும்.
ஈயம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
82Pb | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பளபளப்பான வெள்ளிச்சாம்பல் நிறம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | ஈயம், Pb, 82 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈlɛd/ led | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | post-transition metal | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 14, 6, p | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
207.2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Xe] 4f14 5d10 6s2 6p2 2, 8, 18, 32, 18, 4 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 11.34 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 10.66 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 600.61 K, 327.46 °C, 621.43 °F | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 2022 K, 1749 °C, 3180 °F | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 4.77 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 179.5 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 26.650 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 4, 2 (ஈரியல்புடைய ஒக்சைட்டு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 2.33 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 715.6 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1450.5 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 3081.5 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 175 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 146±5 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 202 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | face-centered cubic | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 208 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 35.3 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 28.9 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 16 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 5.6 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 46 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.44 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
1.5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 38.3 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7439-92-1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: ஈயம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
·சா |
மின்சுற்றுப் பலகைகளிலும், கட்டிடக்கலையிலும், ஈய-அமில மின்கலங்களிலும், துப்பாக்கித் தோட்டாவிலும் ஈயம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஈயம் முற்காலத்தில் நீர்க்குழாய்த் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதன் விஷத் தன்மை காரணமாக அப்பயன்பாடு பின்னர் கைவிடப்பட்டது. உட்கொள்ளப்பட்டால் இது மனிதன் உட்பட அனேகமான விலங்குகளுக்கு மிகவும் விஷமானதாகும். இது நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாகத் தாக்கி சேதப்படுத்தக்கூடியது. முலையூட்டிகளின் இரத்தச்சுற்றோட்டத் தொகுதியும் இதனால் பாதிப்படைகின்றது.