வளைந்த பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
வளைந்த பிரமிடு (Bent Pyramid), பண்டைய எகிப்தை ஆண்ட பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தை நிறுவிய மன்னர் சினெபெரு (கிமு 2613 முதல் கிமு 2589) எகிப்தில் செம்பிரமிடு, மெய்தும் பிரமிடு போன்ற பிரமிடுகளையும், துணை பிரமிடுகளையும் நிறுவினார். அதில் தனது இரண்டாவதான இந்த வளைந்த பிரமிடுவை, தற்கால கெய்ரோவிற்கு தெற்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தச்சூர் நகரத்தில் நிறுவினார்.
விரைவான உண்மைகள் வளைந்த பிரமிடு, ஆள்கூறுகள் ...
வளைந்த பிரமிடு | |
---|---|
மன்னர் சினெபெரு கட்டிய வளைந்த பிரமிடு | |
ஆள்கூறுகள் | 29°47′25″N 31°12′33″E |
பழங்காலப் பெயர் | |
கட்டப்பட்டது | ஏறத்தாழ கிமு 2600 (எகிப்தின் நான்காம் வம்சம்) |
வகை | வளைந்த பிரமிடு |
பொருள் | சுண்ணக்கல் |
உயரம் | |
அடி | |
கனவளவு | 1,237,040 கன சதுர மீட்டர்கள் (43,685,655 cu ft)[2] |
சரிவு |
|
மூடு
வளைந்த பிரமிடு 54 டிகிரி சாய்வில் உயர்ந்து, மேல் பகுதி (47 மீட்டருக்கு மேல்) 43 டிகிரி கோணத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே இது 'வளைந்த' தோற்றத்தை அளிக்கிறது.[4]