லாவோஸ்
தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
இலாவோசு என்று அழைக்கப்படும் இலாவோசு மக்கள் குடியரசு (ஆங்கிலம்: Lao People's Democratic Republic; இலாவோசு மொழி; ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ; Sathalanalat Paxathipatai Paxaxôn Lao); தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
விரைவான உண்மைகள் இலாவோசு மக்கள் குடியரசு, தலைநகரம் ...
இலாவோசு மக்கள் குடியரசு | |
---|---|
குறிக்கோள்: ສັນຕິພາບ ເອກະລາດ ປະຊາທິປະໄຕ ເອກະພາບ ວັດທະນາຖາວອນ "அமைதி, சுதந்திரம், மக்களாட்சி, ஒன்றியம், செல்வம்" | |
நாட்டுப்பண்: பெங் சட் லாவ் | |
தலைநகரம் | வியஞ்சான் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | இலாவோ, பிரெஞ்சு |
பேசும் மொழிகள் | இலாவோ மொழி அமாங் மொழி குமு மொழி பிரெஞ்சு மொழி கத்து மொழி[1] |
இனக் குழுகள் |
|
மக்கள் | இலாவ் |
அரசாங்கம் | சமத்துவக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | தாங்லவுன் சிசோலித் |
• பிரதமர் | பன்கம் விபவன் |
• குடியரசுத் துணைத் தலைவர்கள் | பௌன்தோங் சிட்மனி பனி யாதோடோ |
• இலாவோசு தேசிய சட்டமன்றத்தின் தலைவர் | சேசம்போன் போம்விகானே |
விடுதலை பிரான்சு இடம் இருந்து | |
• நாள் | சூலை 19 1949 |
பரப்பு | |
• மொத்தம் | 236,800 km2 (91,400 sq mi) (83ஆவது) |
• நீர் (%) | 2 |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 6,492,228 (105-ஆவது) |
• 1995 கணக்கெடுப்பு | 4,574,848 |
• அடர்த்தி | 25/km2 (64.7/sq mi) (177ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $13.75 பில்லியன் (129ஆவது) |
• தலைவிகிதம் | $2,200 (138ஆவது) |
ஜினி (2012) | 36.4 மத்திமம் |
மமேசு (2004) | 0.613 மத்திமம் · 133ஆவது |
நாணயம் | கிப் (LAK) |
நேர வலயம் | ஒ.அ.நே+7 |
அழைப்புக்குறி | 856 |
இணையக் குறி | .la |
மூடு
இந்த நாட்டின் வடமேற்கில் சீனா, மியன்மார்; கிழக்கில் வியட்நாம்; தெற்கில் கம்போடியா; மேற்கில் தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைந்து உள்ளன.
தற்கால இலாவோசு, பழைய இலாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.[3]