யூதர்
From Wikipedia, the free encyclopedia
யூதர் (எபிரேயம்: יְהוּדִי, யெகுடி (ஒருமை) יהודים யெகுடிம் (பன்மை), ஆங்கிலம்: Jew, Jews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
1ம் வரிசை: ஐன்ஸ்டைன் · சொலெம் அலிச்சம் · மார்க்கு சாகல் · எமி நோத்தர் 2ம் வரிசை: மாயிமோனிடெஸ் · பரூச் ஸ்பினோசா · நடாலீ போர்ட்மேன் · பிராண்ஸ் காஃப்கா | |||||||||
மொத்த மக்கள்தொகை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
13,746,100 [1] | |||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||
இசுரேல் | 6,042,000[2] | ||||||||
ஐக்கிய அமெரிக்கா | 5,425,000[1] | ||||||||
பிரான்சு | 480,000[1] | ||||||||
கனடா | 375,000[1] | ||||||||
ஐக்கிய இராச்சியம் | 291,000[1] | ||||||||
உருசியா | 194,000[1] | ||||||||
அர்கெந்தீனா | 182,300[1] | ||||||||
செருமனி | 119,000[1] | ||||||||
ஆத்திரேலியா | 107,500[1] | ||||||||
பிரேசில் | 95,300[1] | ||||||||
உக்ரைன் | 67,000[1] | ||||||||
தென்னாப்பிரிக்கா | 70,800[1] | ||||||||
அங்கேரி | 48,600[1] | ||||||||
மெக்சிக்கோ | 39,400[1] | ||||||||
பெல்ஜியம் | 30,300[1] | ||||||||
நெதர்லாந்து | 30,000[1] | ||||||||
இத்தாலி | 28,400[1] | ||||||||
சிலி | 20,500[1] | ||||||||
ஏனைய நாடுகள் | 250,200[1] | ||||||||
மொழி(கள்) | |||||||||
அதிகமாகப் பேசும் மொழிகள்: எபிரேயம் · ஆங்கிலம் · ரஷ்ய மொழி · புலம் பெயர் யூதர்கள் ஏனைய நாடுகளிலுள்ள மொழிகளையும் பேசுகின்றனர் வரலாற்று மொழிகள்: விவிலிய எபிரேயம் · அராமைக் | |||||||||
சமயங்கள் | |||||||||
யூதம் | |||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||||
ஏனைய இலவண்டீனியர்கள்[3][4][5][6], சமாரியர்[5], அராபியர்[5][7], அசிரியர்கள்[5][6] |
யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[8][9] இவர்களில் 42.5 சதவீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 சதவீதமானோர் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35). யாக்கோபின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல் (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டன.