மூத்த பிளினி
உரோம எழுத்தாளரும், வரலாற்றாளரும், இயற்கை மெய்யியலாளரும் ஆவார் / From Wikipedia, the free encyclopedia
கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 – ஆகத்து 25, 79 கிபி), பொதுவாக மூத்த பிளினி (Pliny the Elder) என அழைக்கப்பட்டவர், உரோம எழுத்தாளரும், வரலாற்றாளரும், இயற்கை மெய்யியலாளரும் ஆவார். அத்துடன் உரோமைப் பேரரசின் கடற்படை, மற்றும் இராணுவத் தளபதியாகவும் பேரரசர் வெஸ்பாசியானின் நண்பராகவும் இருந்தவர். இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இயற்கை வரலாறு, மற்றும் புவியியல் நிகழ்வுகளை ஆராய்வதில் கழித்தார். இவர் கிபி 77 இல் வெளியிட்ட இயற்கை வரலாறு (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழியிலான நூலே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சியம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்டதாக இது உள்ளது. 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த அநுபவங்களில் இருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.
முதிய பிளினி Pliny the Elder Gaius Plinius Secundus | |
---|---|
முதிய பிளினி: 19ம் நூற்றாண்டில் வரையப்பட்ட கற்பனை ஓவியம். | |
பிறப்பு | கிபி 23 கோமோ, பொம்பெயி, இத்தாலி |
இறப்பு | ஆகத்து 25, 79 (அகவை 55–56) ஸ்டாபி, இத்தாலி |
இறப்பிற்கான காரணம் | எரிமலை வெடிப்பில் பொம்பெயி நகரம் அழிக்கப்பட்ட போது இறந்தார். |
உடல் கண்டறியப்பட்ட இடம் | நுரைக்கற்களின் அடியில் நண்பர்களினால் மீட்கப்பட்டது |
இருப்பிடம் | ரோம், மாகாண இடங்கள், மிசெனும் |
குடியுரிமை | உரோமர் |
கல்வி | சொல்லாட்சி, இலக்கண ஆசிரியர் |
பணி | சட்டவாதி, எழுத்தாளர், இயற்கையியலாளர், இராணுவப் படைத்தளபதி, மாகாண ஆளுனர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இயற்கை வரலாறு |
எடை | பிற்காலத்தில் பெருத்த உருவம் |
பெற்றோர் | செலெர், மார்செலா |
வாழ்க்கைத் துணை | எவருமில்லை |
பிள்ளைகள் | எவருமில்லை |
உறவினர்கள் | உடன்பிறப்பு (பிளினியா), மருமகன் இளைய பிளினி |
பொம்பெயி நகரை அழித்த வெசுவியசு எரிமலை வெடிப்பில் சிக்குண்ட தனது நண்பரையும் அவரது குடும்பத்தினரையும் கப்பல் ஒன்றின் மூலம் காப்பாற்ற முயன்ற போது கிபி 79, ஆகத்து 25 இல் இறந்தார்.[1]