மீவியற்பியல்
From Wikipedia, the free encyclopedia
மீவியற்பியல் அல்லது பெளதீக அதீதவியல் (Metaphysics) என்பது மெய்யியலின் ஒரு கிளை ஆகும். அது "இருப்பு" (being) என்றால் என்ன, "உலகு" என்பதன் பொருள் யாது போன்ற வேரோட்டமான கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கு விடைதேடுகின்ற அறிவியல் துறையைச் சார்ந்தது.[1][2] வழக்கமாக, "மீவியற்பியல்" இரு அடிப்படையான கேள்விகளுக்கு மிக விரிவான பின்னணியில் விடை தேடுகிறது. அக்கேள்விகள்:
- "இருப்பது" என்ன?
- அது இருக்கும் "விதம்" என்ன? [3]