பெலருஸ்
From Wikipedia, the free encyclopedia
பெலருஸ் (IPA: ˈbɛləruːs, பெலருசிய மொழி: Беларусь, ரஷ்ய மொழி: Белору́ссия, ஒலிப்புⓘ) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும்.[2] இதன் எல்லைகள் வலஞ்சுழியாக ரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா, லத்வியா ஆகிய அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்த், குரோத்னோ, கோமல், மகிலெவ், வித்தெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள் ஆகும். இந்நாட்டின் 207,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 40% வனப்பகுதியாக உள்ளது.[3] நாட்டின் முக்கிய பொருளாதாரம் விவசாயத்திலும் விவசாய உபகரண உற்பத்தியிலும் தங்கியுள்ளது.
Рэспубліка Беларусь Республика Беларусь பெலரூஸ் குடியரசு/span> | |
---|---|
நாட்டுப்பண்: Мы, беларусы (பெலருசிய மொழி) மி பெலரூசி நாம் பெலருசியர்கள் | |
தலைநகரம் | மின்ஸ்க் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | பெலருசியம், ருசியம் |
மக்கள் | பெலருசியர் |
அரசாங்கம் | குடியரசு |
• குடியரசுத் தலைவர் | அலெக்சான்டர் லுகசெங்கோ |
• பிரதமர் | செர்கெய் சிடோர்ஸ்கி |
விடுதலை சோவியத் ஒன்றியம் இடம் இருந்து | |
• கூற்றம் | ஜூலை 27 1990 |
• தொடக்கம் | ஆகஸ்ட் 25 1991 |
• முடிவு | டிசம்பர் 25 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 207,600 km2 (80,200 sq mi) (85வது) |
• நீர் (%) | சிறிய (183 km²)1 |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 9,689,800[1] (86வது) |
• 1999 கணக்கெடுப்பு | 10,045,200 |
• அடர்த்தி | 49/km2 (126.9/sq mi) (142வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $79.13 பில்லியம் (64வது) |
• தலைவிகிதம் | $7,700 (78வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $36.94 பில்லியன் (69வது) |
• தலைவிகிதம் | $3,808 (82வது) |
ஜினி (2002) | 29.7 தாழ் |
மமேசு (2005) | 0.804 Error: Invalid HDI value · 64வது |
நாணயம் | பெலருசிய ரூபிள் (BYR) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கி.ஐ.நே.) |
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே) | |
அழைப்புக்குறி | 375 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BY |
இணையக் குறி | .by |
|
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. உருசியப் புரட்சியின் விளைவாக பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது[4]. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு போலந்தில் 1939இல் நடைபெற்றதன் விளைவாக போலந்துக் குடியரசின் சிறுபகுதி பெலருசுடன் இணைந்தது, இதுவே இன்று காணப்படும் பெலாரசில் நிகழ்ந்த இறுதியான இணைப்பாகும்.[5][6][7][8][9][10] இந்நாட்டின் பகுதிகளும் தேசியமும் இரண்டாம் உலகப்போரில் சூறையாடப்பட்டன, பெலாரஸ் தனது மூன்றில் ஒரு பகுதி மக்களை இதன் போது இழந்தது; அரைவாசிக்கும் அதிகமான பொருளாதார வருவாயை இழந்தது. பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு 1945 இல்சோவியத் யூனியனுடனும் உக்ரேய்ன் சோவியத் சோசலிசக் குடியரசுடனும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்தது.
27 சூலை1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகத்து 1991 இல் பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். மேற்குலக நாட்டரசாங்கங்களின் எதிர்ப்பு இருந்தும் இவரது தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் காலத்து நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன. சில நிறுவனங்கள், நாடுகளின் மேற்கோற்படி வாக்கெடுப்புகள் நியாயமற்ற முறையில் நிகழ்ந்து அரசியல் எதிர் வேட்பாளர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.[11][12][13] 2000ம் ஆண்டிலிருந்து ஒரு ஒப்பந்தம் அயல்நாடான ரஷ்யாவுடன் கைச்சாத்திடப்பட்டது, இது இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் ஆகும்.
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.
2009ம் ஆண்டில் பெலருசின் சனத்தொகை 9.6 மில்லியன்கள் ஆகும்.[14] இந்நாட்டில் 80%க்கும் அதிகமானோர் பெலருசியர் ஆவர், இவர்களை விட சிறுபான்மையாக உருசியர்கள், போலந்து நாட்டவர், உக்ரேனியர் ஆகியோரும் உள்ளனர். இந்நாட்டின் அரசகரும மொழி இரண்டு: பெலருசிய மொழி, உருசிய மொழி.