பெரிய அண்டிலிசு
From Wikipedia, the free encyclopedia
பெரிய அண்டிலிசு (Greater Antilles) கரிபியக் கடலில் பெரியத் தீவுகளின் தொகுப்பாகும்; கியூபா, (எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு உள்ளடக்கிய) லா எசுப்பானியோலா, புவேர்ட்டோ ரிக்கோ, ஜமேக்கா, மற்றும் கேமன் தீவுகள் இதில் அடங்கும். முழுமையான மேற்கிந்தியத் தீவுகளின் நிலப்பரப்பில் 90% பெரிய அண்டிலிசில் உள்ளது.[1] தவிரவும் 90% க்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் இத்தீவுகளில்தான் உள்ளனர்; மிகுதி கிழக்கிலுள்ள சிறிய அண்டிலிசு தீவுகளில் உள்ளனர்.
பெரிய அண்டிலிசு Grandes Antilles (பிரெஞ்சு) Antillas Mayores (எசுப்பானியம்) | |
---|---|
கரிபியனில் அமைவிடம். | |
தீவு நாடுகள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 207,435 km2 (80,069 sq mi) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 3,75,82,088 |
• அடர்த்தி | 169.05/km2 (437.8/sq mi) |
நேர வலயங்கள் | கிநேவ: ஒ.ச.நே - 05:00/ஈடிடி: ஒ.ச.நே - 04:00 |
அத்திலாந்திக்கு நேர வலயம்: ஒ.ச.நே - 04:00/அ.பகல்சேமிப்பு நேரம்: ஒ.ச.நே - 03:00 |
புதிய உலகத்தை ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன்னரே அண்டிலிசு என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது; பழங்கால வரைபடங்களில் ஐரோப்பியர்கள் இத்தகையதோர் மர்மமான நிலப்பகுதியை அண்டிலியா (தீவு) எனக் குறிப்பிட்டு வந்தனர். இது சில நேரங்களில் தீவுக் கூட்டமாகவும் சில நேரங்களில் தொடர்ந்த நிலப்பகுதியாகவும் காட்டப்பட்டது; தற்கால கேனரித் தீவுகளுக்கும் யூரேசியாவிற்கும் இடையே இது கடற்பகுதியில் இருந்ததாக நம்பப்பட்டது.