பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிய பிரித்தானியக் குடியேற்றவிய ஆட்சி / From Wikipedia, the free encyclopedia
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947-ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1858–1947 | |||||||||||||||||
நாட்டுப்பண்: காட் சேவ் தி குயின் (கடவுள் அரசியை காப்பாற்றுவராக) | |||||||||||||||||
நிலை | முடியாட்சி | ||||||||||||||||
தலைநகரம் | கொல்கத்தா (1858–1912) புது டில்லி (1912–1947) | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | இந்துஸ்தானி, ஆங்கிலம், தமிழ் உட்பட மேலும் | ||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||
இந்தியாவின் பேரரசர்/பேரரசி (1876–1947) | |||||||||||||||||
• 1858–1901 | விக்டோரியா | ||||||||||||||||
• 1901–1910 | ஏழாம் எட்வர்ட் | ||||||||||||||||
• 1910–1936 | ஐந்தாம் ஜோர்ஜ் | ||||||||||||||||
• 1936 | எட்டாம் எட்வர்ட் | ||||||||||||||||
• 1936–1947 | ஆறாம் ஜார்ஜ் | ||||||||||||||||
இந்திய வைசுராய்² | |||||||||||||||||
• 1858–1862 | விஸ்கவுன்ட் கானிங்க் | ||||||||||||||||
• 1862–1863 | எர்ல் எட்டாவது எல்ஜின் | ||||||||||||||||
• 1864–1869 | சர் ஜான் லாரென்ஸ் | ||||||||||||||||
• 1869–1872 | எர்ல் மாயோ | ||||||||||||||||
• 1872–1876 | நார்த்புரூக் பிரபு | ||||||||||||||||
• | லிட்டன் பிரபு | ||||||||||||||||
• 1880–1884 | மார்க்கஸ் ரிப்பன் | ||||||||||||||||
• 1884–1888 | எர்ல் டுப்ரின் | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
• அமைப்பு | ஆகஸ்டு 2 1858 | ||||||||||||||||
ஆகஸ்டு 15 1947 | |||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||
1937 | 4,903,312 km2 (1,893,179 sq mi) | ||||||||||||||||
1947 | 4,226,734 km2 (1,631,951 sq mi) | ||||||||||||||||
நாணயம் | பிரித்தானிய இந்திய ரூபாய் | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | வங்காளதேசம் மியான்மர் இந்தியா பாக்கித்தான் | ||||||||||||||||
¹ Reigned as Empress of India from May 1, 1876, before that as Queen of the United Kingdom. ² Governor-General and Viceroy of India |
ஆளும் முறை 1858-ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876-ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945-இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.