பியூட்டேன்
நான்கு கார்பன்களைக் கொண்ட ஓர் ஆல்க்கேன் / From Wikipedia, the free encyclopedia
பியூட்டேன் (Butane)என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C4H10 ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CH3CH2CH2CH3.
பியூட்டேன் | |
---|---|
பொது | |
பிற பெயர்கள் | |
மூலக்கூறு வாய்பாடு | |
மூலக்கூறு திணிவு | 58.08 கிராம்/மோல் (g/mol) |
புறத் தோற்றம் | நிறமற்ற வளிமம் |
CAS எண் | [106-97-8] |
பண்புகள் | |
அடர்த்தி மற்றும் இயல் நிலை | 2.52 கிராம்/(செ.மீ)3 (g/cm3), 15°C 1 காற்றழுத்த மண்டலம் (atm) {{{பொருள் நிலை}}} |
நீரில் கரைமை | 6.1 மில்லி கிராம்/100 மில்லி லீ (20 °C) |
உருகும் நிலை | −138.3°C ( 134.9 K) |
கொதி நிலை | −0.5°C (272.7 K) |
முக்கூட்டு முப்புள்ளி நிலை | K, பார் அழுத்தம் (bar) |
திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical) | °K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm) |
காடித்தன்மை | |
நகர்ப்பிசுக்கம் | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இணையழகுக் குழு (Symmetry group) | |
மூலக்கூறின் இருமுனைத் தன்மை| | |
தீநிகழ் வாய்ப்புகள் | |
பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS) | MSDS வெளியிணைப்பு |
ஐரோப்பிய வகையீடு | மிகவும் தீபற்றும் இயல்பு (F+) |
என்.எப்.பி.ஏ 704 | |
R-சொற்றொடர்கள் | R12 |
S-சொற்றொடர்கள் | (S2), S9, S16, S33 |
தீ பற்றும் வெப்ப நிலை | −60°C |
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை | 287°C |
மீகம எரியும் வெப்பநிலை: | °C |
வெடிக்கும் எல்லை | 1.8–8.4% |
மேலதிக தரவுகள் பக்கம் | |
கட்டமைப்பும் பண்புகளும் | |
வெப்ப இயக்கவியல் தரவுகள் | |
ஒளிமாலைத் தரவுகள் | புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு |
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள் | |
தொடர்புடைய வேதியியல் பொருட்கள் | புரொப்பேன் பென்ட்டேன் |
தொடர்புடைய கூட்டுபொருட்கள் | ஐசோபியூட்டேன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும் Infobox disclaimer and references |
இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும். அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது. இதன் பெயர் பியூட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பியூட் மற்றும் அல்கேன்களுக்கான விகுதி ஏன் ஆகியைவ இணைந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சேர்மம் எட்வர்ட் பிரேங்லேண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]