பாக்கித்தானிய ரூபாய்
From Wikipedia, the free encyclopedia
பாக்கித்தானிய ரூபாய் (உருது: روپیہ மொழிபெயர்ப்பு: ரூபியா}}; ஐ.எசு.ஓ: PKR) பாக்கித்தானின் அலுவல்முறையான நாணயம் ஆகும். இதனை நாட்டின் நடுவண் வங்கியாக செயல்படும் பாக்கித்தானிய அரசு வங்கி வெளியிடுகின்றது. மிகவும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் சின்னம் ரூ ஆகும்; சரக்குகளையும் சேவைகளையும் பாவிக்கும் போது வழங்கப்படும் இரசீதுகளில் இச்சின்னம் பயன்படுத்தப்படுகின்றது. பாக்கித்தானில் "ரூபாய்கள்", "ருபாயா" அல்லது "ருபாயே" என அறியப்படுகின்றது. பாக்கித்தானில் ரூபாயின் பெரும் மதிப்புகள் தென்னாசிய எண் முறையில் ஆயிரம், இலட்சம் (100 ஆயிரங்கள்), கோடி (10 மில்லியன்), 1 அரப் (1 பில்லியன்), 1 கரப் (1/10 டிரில்லியன்), 100 கரப் என எண்ணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் ஐ.எசு.ஓ 4217, குறி ...
ஐ.எசு.ஓ 4217 | |
---|---|
குறி | PKR (எண்ணியல்: 586) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
வேறுபெயர் | ருபய்யா , பைசே |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | பைசா (பயனில் இல்லை) |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 10, 20, 50, 100, 500, 1000, 5000 ரூபாய்கள் |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 2, 5 ரூபாய்கள் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | பாக்கித்தான் ஆப்கானித்தான் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | பாக்கித்தானிய அரசு வங்கி |
இணையதளம் | www |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 1.8% (சூலை 2015)[1] |
ஆதாரம் | 2013[2] |
மூடு