பத்தொன்பதாம் நூற்றாண்டு (திரைப்படம்)
2022 இந்திய மலையாளத் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி வரலாற்று நாடக அதிரடித் திரைப்படமாகும். இதை வினயன் எழுதி இயக்கியுள்ளார். [3] [4] 19 ஆம் நூற்றாண்டின் திருவிதாங்கூரை மையமாக வைத்து, சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடிய ஆறாட்டுப்புழா வேலாயுத பணிக்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை. நங்கேலி மற்றும் காயங்குளம் கொச்சுன்னியின் கதையையும் படம் சித்தரிக்கிறது. [5] இப்படத்தில் சிஜு வில்சன், கயாடு லோஹர், அனூப் மேனன், செம்பன் வினோத் ஜோஸ், தீப்தி சதி, பூனம் பஜ்வா, ரேணு சௌந்தர், செந்தில் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [6]
விரைவான உண்மைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இயக்கம் ...
பத்தொன்பதாம் நூற்றாண்டு | |
---|---|
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | வினயன் |
தயாரிப்பு | கோகுலம் கோபாலன் |
கதை | வினயன் |
இசை | எம். ஜெயசந்திரன் (பாடல்கள்) சந்தோஷ் நாராயணன் (பின்னணி இசை) |
நடிப்பு | சிசு வில்சன் அனூப் மேனன் தீப்தி சதி பூனம் பஜ்வா செம்பன் வினோத் ஜோஸ் |
ஒளிப்பதிவு | ஷாஜி குமார் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | சிறீ கோகுலம் மூவீசு |
விநியோகம் |
|
வெளியீடு | 8 செப்டம்பர் 2022 (2022-09-08) (இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹25 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹30 கோடி[2] |
மூடு