நோட்ரே டேம் டி பாரிஸ்
From Wikipedia, the free encyclopedia
நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.[2]
பாரிஸ் அன்னை மறைமாவட்ட முதன்மைப்பேராலயம் | |
---|---|
ஆலயத்தின் தெற்கு முகப்பு | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | 6 Parvis Notre-Dame, Place Jean-Paul II, 75004 Paris, France |
புவியியல் ஆள்கூறுகள் | 48.8530°N 2.3498°E / 48.8530; 2.3498 |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் வழிபாட்டு முறை |
மண்டலம் | இல் ட பிரான்சு |
மாநிலம் | பிரான்சு |
மாகாணம் | பாரிஸ் உயர் மறைமாவட்டம் |
நிலை | மறைமாவட்ட முதன்மைப்பேராலயம் |
செயற்பாட்டு நிலை | நடப்பில் உள்ளது |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1862 |
தலைமை | André Vingt-Trois |
இணையத் தளம் | www |
Monument historique | |
Official name: Cathédrale Notre-Dame | |
Designated: | 1862 |
Reference No. | PA00086250[1] |
Denomination: | Église |