நீர்க்காகம்
From Wikipedia, the free encyclopedia
நீர்க்காகம் (cormorant) என்பது ஒருவகை நீர்ப்பறவை ஆகும். இச்சொல் பலக்ரோகோராசிடாய் (Phalacrocoracidae) குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 வகையான நீர்ப்பறவை இனங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
நீர்க்காகங்கள் புதைப்படிவ காலம்:பின் கிரேடாசியஸ்–தற்காலம் | |
---|---|
சிறு பலவண்ண நீர்க்காகம் Microcarbo melanoleucos | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | பாலாக்ரோகோரசிடே ரெயிச்சென்பக், 1850 |
பேரினம்: | பாலாக்ரோகோராக்சு ப்ரிஸ்ஸன், 1760 |
இனங்கள் | |
3–43 | |
வேறு பெயர்கள் | |
Australocorax லம்ப்ரெச்ட், 1931 |
நீர்க்காகங்கள் நடுத்தரம் முதல் பெரிய அளவுடைய பறவைகள் ஆகும். இவற்றின் உடல் எடை 0.35-5 கிலோகிராம் மற்றும் இறக்கை நீளம் 45-100 செ.மீ. (18-39 அங்குலம்) ஆகும். இவற்றில் பெரும்பகுதி இனங்கள் கருப்பு இறகுகளைக் கொண்டுள்ளன. அலகானது நீளமாகவும், ஒல்லியாகவும் மற்றும் வளைந்தும் காணப்படுகிறது. இவற்றின் நான்கு கால்விரல்களுக்கு நடுவிலும் தோல் உள்ளது. அனைத்து இனங்களும் மீன்களை உண்கின்றன. நீரின் மேற்பரப்பில் இருந்து முக்குளிப்பதன் மூலம் இரையைப் பிடிக்கின்றன. சில நீர்க்காகங்கள் சுமார் 45 மீ ஆழம் வரை செல்கின்றன. இவற்றின் இறக்கைகள் குட்டையாக உள்ளன.
இவை கரையோரத்தில், மரங்களில், தீவுகளில் அல்லது செங்குத்தான பாறைகளில் கூட்டமாக வாழ்பவை ஆகும். இவை கடலில் வாழ்வதில்லை. மாறாகக் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன. இதன் உண்மையான மூதாதையர் ஒரு நன்னீர்ப் பறவை ஆகும். இவை மத்திய பசிபிக் தீவுகளைத் தவிர, உலகெங்கிலும் உள்ளன.