நவம்பர்
மாதம் / From Wikipedia, the free encyclopedia
நவம்பர் (November, நொவெம்பர்) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பதினோராவது மாதமும், 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில் நான்காவதும் கடைசி மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "நொவெம்" (novem) என்றால் "ஒன்பது" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் (அண். கிமு 750) ஒன்பதாவது மாதமான நவம்பர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.[1]
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV | ||||||
நவம்பர் மாதம் பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர்காலத்துடனும், தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்துடனும் தொடர்புள்ளது. எனவே, காலநிலை ஒப்பீட்டில் தெற்கு அரைக்கோளத்தில் நவம்பர் மாதம் வடக்கு அரைக்கோளத்தின் மே மாதத்திற்கு சமனாகும்.