தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூர் குடியரசு தலைவர் / From Wikipedia, the free encyclopedia
தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam, பிறப்பு: 25 பெப்ரவரி 1957) சிங்கப்பூர் அரசியல்வாதியும், பொருளியலாளரும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு முன்னர் 2019 முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2015 முதல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக 2011 முதல் 2019 வரை துணைப் பிரதமராகவும், 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராகவும், 2007 முதல் 2015 வரை நிதி அமைச்சராகவும்[2] பணியாற்றியிருந்தார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர், 2001 முதல் தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.[1][3]
தர்மன் சண்முகரத்தினம் Tharman Shanmugaratnam | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2023 இல் தர்மன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
9-ஆவது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தெரிவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 14 செப்டம்பர் 2023 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | லீ சியன் லூங் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Succeeding | அலிமா யாக்கோபு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | தர்மன் சண்முகரத்தினம் 25 பெப்ரவரி 1957 (1957-02-25) (அகவை 67)[1] சிங்கப்பூர் காலனி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | சுயேச்சை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | மக்கள் செயல் கட்சி (2001–2023) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர் | சேன் யுமிக்கோ இத்தோகி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெற்றோர் |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி | இலண்டன் பொருளியல் பள்ளி (BSc) கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (MPhil) ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுகலை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேலை |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றியுள்ளார். பல்வேறு உயர்மட்டப் பன்னாட்டுப் பேரவைகளுக்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4]
தர்மன் 2021 இல் ஜி-20 உயர்மட்ட சுயாதீனக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அனைத்துலக நாணய நிதியத்தின் முக்கிய கொள்கை மன்றமான பன்னாட்டு நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்த முதலாவது ஆசியத் தலைவராக ஆனார். கூடுதலாக, இவர் தற்போது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும், உலகப் பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
2001 பொதுத் தேர்தலில் தர்மன் அரசியலுக்கு அறிமுகமானார். 2006, 2011, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 சூன் 8 அன்று, தர்மன் 2023 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அரசாங்கத்தில் உள்ள அனைத்து பதவிகளிலிருந்தும், மக்கள் செயல் கட்சியில் இருந்தும் 2023 சூலை 7 முதல் விலகுவதாக அறிவித்தார்.[5][6] 2023 செப்டம்பர் 1 இல் இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தர்மன், தனக்கெதிராகப் போட்டியிட்ட எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோரைத் தோற்கடித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7] இதன்மூலம், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சிறுபான்மை இனத்திலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆனார். 1993 ஆம் ஆண்டு ஓங் டெங் சியோங்கிற்குப் பிறகு பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் இவரது 70.4% மற்றும் 1,746,427 வாக்குகள் சிங்கப்பூர் வரலாற்றில் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் மிகப்பெரிய வாக்குப் பங்கும் வாக்கு எண்ணிக்கையும் ஆகும்.[8]