சியா இசுலாம்
முகமது தனக்குப்பின் அலியை தலைவராக நியமித்தார் என்பதை அடிப்படையாகக் கொண்ட இசுலாமின் பிரிவு / From Wikipedia, the free encyclopedia
ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாத்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். [1]ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.[2]
இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.[3] ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் இரான். இரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பஹ்ரைன், கத்தார், பாகிஸ்தான், சிரியா, ஏமன், இந்தியா, வங்காள தேசம் நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.