சிந்தி மொழி
From Wikipedia, the free encyclopedia
சிந்தி மொழி (ஆங்கில மொழி: Sindhi English pronunciation: /ˈsɪndi/;[5] சிந்தி மொழி: سنڌي, சிந்தி உச்சரிப்பு: [sɪndʱiː]) தெற்காசியாவின் சிந்துப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இப்பகுதி தற்போது பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானியப் பிரிவைச் சேர்ந்த இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று. இது பாகிஸ்தானில் சுமார் 18.5 மில்லியன் மக்களாலும், இந்தியாவில் ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. இது மேற்படி இரண்டு நாடுகளிலும் உத்தியோக பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இம் மொழி ஒர் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டு உள்ள போதும், இதில் திராவிட மொழிச் செல்வாக்குக் காணப்படுவதால் இது ஒரு தனித்துவமான மொழியாக விளங்குகிறது. பெரும்பாலான சிந்தி போசுவோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செறிந்து வாழ்கின்றனர்.[6] ஏனையோர் இந்தியாவிலும், உலகின் வேறுபல நாடுகளில் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.
சிந்தி | |
---|---|
سنڌي | |
பெர்சோ-அரேபிய எழுத்தில் எழுதப்பட்ட சிந்தி மொழி | |
நாடு(கள்) | பாக்கித்தான் மற்றும் இந்தியா |
பிராந்தியம் | சிந்து மற்றும் அண்டை பகுதிகள் |
இனம் | சிந்தி மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | அண். 32 மில்லியன் (2017)[1] |
இந்திய-ஐரோப்பியம்
| |
பெர்சோ-அரபு (நாஸ்க்), தேவநாகரி (இந்தியா) and others | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பாக்கித்தான் இந்தியா[lower-alpha 1][lower-alpha 2] |
Regulated by |
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sd |
ISO 639-2 | snd |
ISO 639-3 | snd |
மொழிக் குறிப்பு | sind1272 (Sindhi)[4] |
Linguasphere | 59-AAF-f |
2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு பாக்கித்தானிய மாவட்டத்திலும் சிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் விகிதம் | |
ஆபத்தில் உள்ள உலக மொழிகளின் யுனெஸ்கோ அட்லஸின் வகைப்பாடு முறையின்படி சிந்தி அழியும் நிலையில் இல்லை | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |