சிங்களவர்
From Wikipedia, the free encyclopedia
சிங்களவர் (Sinhalese, සිංහල ජාතිය) (தமிழில் சிங்களர் என்று கூறப்படுவது உண்டு) இலங்கையின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(18 மில்லியனுக்கு மேற்பட்டது) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இலங்கை 15,173,820 (74.88%) (2012)[1] | |
ஐக்கிய இராச்சியம் | ~150,000 (2010)[2] |
ஆத்திரேலியா | 100,000-க்கு மேல்[3] |
இத்தாலி | 80,738-க்கு மேல் (2008)[4] |
கனடா | 70,000-க்கு மேல் (2016)[5] |
ஐக்கிய அமெரிக்கா | 100,000 (2016)[6][நம்பகத்தகுந்த மேற்கோள்?] |
சிங்கப்பூர் | 60,000 (2016)[7] |
மலேசியா | 25,000 (2016)[8] |
நியூசிலாந்து | 30,257 (2016)[9] |
இந்தியா | குறைந்தபட்சம்-55,000[10][11] |
மொழி(கள்) | |
சிங்களம், ஆங்கிலம், தமிழ் | |
சமயங்கள் | |
தேரவாத பௌத்தம் கிறித்தவம் |
கி.மு. 5-ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காளம் மற்றும் ஒரிசாவிலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் பாண்டிநாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் இனக்கலப்புகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன.[12] இவர்கள் பொதுவாக, காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும், அயலிலுள்ள திராவிடர்களுடைய அடையாளங்களும், இவர்களிடம் காணப்படுகின்றன.