சிங்கப்பூரில் இந்து சமயம்
From Wikipedia, the free encyclopedia
இந்து சமயமும், கலாச்சாரமும் சிங்கப்பூரில் கி.பி. ஏழாம் நுாற்றாண்டு தொடங்கி காணப்படுகிறது. டெமாசெக் என்பார் இந்து-பௌத்த சிறீவிஜயப் பேரரசில் வணிகம் சார்ந்த பதவியை வகித்த போதிலிருந்து இந்த தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து, பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தால் பிரித்தானியா கிழக்கிந்திய நிறுவனத்தின் மூலம் தென்னிந்தியாவில் இருந்து கூலிகளாகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் மக்கள் குடியேற்றப்பட்டனர். [1][2] மலாய் தீபகற்பத்தைப் போலவே, பிரித்தானிய நிர்வாகமும் அதன் பிராந்திய தோட்ட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நம்பகமான தொழிலாளர் சக்தியை உறுதிப்படுத்த முயன்றது.குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து கங்காணி அமைப்பு மூலம் குடியேறவும், கோயில்களைக் கட்டவும், இந்துக்களை ஊக்குவித்தனர். இந்த சமுதாய அமைப்பானது பின்னர் சிறிது சிறிதாக ஒரு குட்டி இந்தியாவாக மாறியது..[3][4]
தற்போதைய நிலையில், பல்வேறு இந்து கடவுள்களுக்கான ஏறத்தாழ முப்பதுக்கு மேற்பட்ட முக்கிய இந்து கோயில்கள் சிங்கப்பூரில் உள்ளன. 2010 ஆண்டின் நிலையில் 2,60,000 இந்துக்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, வயது வந்த மற்றும் சிங்கப்பூர் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களாகவும் உள்ள இந்துக்கள், சிறுபான்மையினராக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 5.1 விழுக்காடு அளவிற்கு வாழ்கின்றனர். சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து இந்துக்களும் இந்திய இந்துக்கள் ஆவர். 1931 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 5.5% என்ற உச்ச அளவைக் கொண்டிருந்தது.[6] சிங்கப்பூரில் இந்துக்களின் விழாவான தீபாவளி நாளானது அங்கீகரிக்கப்பட்ட தேசிய பொது விடுமுறை தினமாக உள்ளது. சில இந்தியரல்லாதோர், வழக்கமாக, பௌத்த சீனர்கள் பல்வேறு இந்து மதச்சடங்குகளில் பங்கேற்கின்றனர். மலேசியா மற்றும் இந்தோனேசியாவைப் போன்றல்லாமல், சிங்கப்பூர் இந்துக்களின் மதம் சார்ந்த சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை.
ஆண்டு | விழுக்காடு | அதிகரிப்பு |
---|---|---|
1849 | 2.8% | - |
1911 | 5.0% | +2.2% |
1921 | 4.6% | -0.4% |
1931 | 5.5% | +0.9% |
1980 | 3.6% | -1.9% |
1990 | 3.7% | +0.1% |
2000 | 4.0% | +0.3% |
2010 | 5.1% | +1.1% |
2015 ஆம் ஆண்டில் இந்துக்களாக பதிவு செய்யப்பட்ட குடியுரிமை பெற்ற இந்து மக்களின் மக்கள் தொகை[7]
இனக்குழுக்கள் | இந்துக்களாக பதிவு செய்யப்பட்ட குடியுரிமை பெற்ற இந்து மக்களின் மக்கள் தொகை | இந்துக்களாக பதிவு பெற்று குடியுரிமை பெற்ற மக்களின் விழுக்காடு | குடியுரிமை பெற்ற மக்களின் விழுக்காடு | இனக்குழுக்களின் குடியுரிமை பெற்றோரின் மொத்த மக்கள் தொகை |
---|---|---|---|---|
சீனர்கள் | 300 | 0.012% | 76.84% | 2,517,580 |
மலேசியர்கள் | 100 | 0.026% | 11.88% | 389,090 |
இந்தியர்கள் | 161,800 | 59.88% | 8.25% | 270,220 |
இதரர் | 400 | 0.403% | 3.03% | 99,300 |
ஒட்டுமொத்தம் | 162,600 | 4.964% | 100% | 3,276,190 |