![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Kochi_montage2.jpg/640px-Kochi_montage2.jpg&w=640&q=50)
கொச்சி
கேரள மாநிலத்தின் துறைமுகங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
கொச்சி (Kochi) (வார்ப்புரு:IPA-ml) இதனை கொச்சின் (Cochin) என்றும் அழைப்பர். (/ˈkoʊtʃɪn/ KOH-chin), தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த கொச்சி நகரம், கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி மிக்க பெருநகரம் ஆகும். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 94.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 6,77,381 ஆகும்.[4] கொச்சி நகரம் பெருநகர கொச்சி வளர்ச்சிப் பகுதியின் ஒரு பகுதியாகும்.[9][10]
கொச்சி
கொச்சின் | |
---|---|
பெருநகரம் | |
![]() | |
அடைபெயர்(கள்): அரபுக் கடலின் இராணி[1][2] | |
ஆள்கூறுகள்: 9.9312°N 76.2673°E / 9.9312; 76.2673 | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | எறணாகுளம் |
நிறுவிய நாள் | 1 ஏப்ரல் 1958[3] |
அரசு | |
• நிர்வாகம் | கொச்சி மாநகராட்சி |
பரப்பளவு | |
• பெருநகரம் | 94.88 km2 (36.63 sq mi) |
• மாநகரம் | 440 km2 (170 sq mi) |
ஏற்றம் | 26.02 m (85.37 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• பெருநகரம் | 6,77,381 |
• அடர்த்தி | 7,100/km2 (18,000/sq mi) |
• பெருநகர் | 21,19,724 |
இனம் | Cochinite[7][8] |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் சுட்டு எண் | 682xxx, 683xxx |
Area code | +91484xxxxxxx |
வாகனப் பதிவு | KL-7, KL-39, KL-41, KL-42, KL-43, KL-63 |
உயர்நீதிமன்றம் | கேரளா உயர் நீதிமன்றம் |
கடற்கரை | 48 கிலோமீட்டர்கள் (30 mi) |
பாலின விகிதம் | 1028 ♂/♀ |
எழுத்தறிவு | 98.5% |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | Very High |
வளர்ச்சி முகமை | பெருநகர கொச்சி வளர்ச்சி முகமை |
தட்பவெப்பம் | இந்தியாவின் தட்பவெப்ப நிலை(கோப்பென்) |
மழைப் பொழிவு | 3,228.3 மில்லிமீட்டர்கள் (127.10 அங்) |
இணையதளம் | cochinmunicipalcorporation |
கொச்சி மாநகராட்சி 1967-இல் நிறுவப்பட்டது.[11]
கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, ஐரோப்பிய நாடுகளுக்கு கொச்சி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் கொச்சியை அரபுக் கடலின் இராணி என அழைப்பர்.
கிபி 1503-இல் கொச்சியை போர்த்துகேயர்கள் (1503–1663) கைப்பற்றினர். பின்னர் டச்சுக்காரர்கள் (1663–1795) கொச்சி நகரத்தைக் கைப்பற்றினர். 1795-இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினர், கொச்சி இராச்சியத்தை கைப்பற்றி, தங்களது அதிகாரத்திற்குட்பட்ட சுதேச சமஸ்தானமாக ஆக்கினர்.
கேரளாவின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி முனையமாக கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது.[12][13] இந்தியாவின் ஆறு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கொச்சி விளங்குகிறது.[14] இந்தியாவின் பன்னாட்டுத் துறைமுகங்களில் கொச்சி துறைமுகம் ஒன்றாகும்.[15]
கேரளாவின் பெரும் நிதி மற்றும் வணிக மையமாக கொச்சி நகரம் விளங்குகிறது.[16][17][18][19] and industrial[20][21]
கேரளா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி நகரம் பெரும் பங்கு வகிக்கிறது.[22][23]
இந்தியக் கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் உள்ளது.[24][25]
இந்தியக் கடலோரக் காவல்படையின் தென் மண்டல அலுவலகம் கொச்சியில் இயங்குகிறது.[26] கொச்சியில் இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தின் கிளை உள்ளது.[15] கொச்சியில் கொச்சி பங்குச் சந்தை, பன்னாட்டு மிளகு வணிக மையம், தென்னை வளர்ச்சிக் கழகம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், திருவாங்கூர் உரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலை, இந்துஸ்தான் இயந்திரக் உபகரணங்கள் (HMT), அப்போல்லா டயர்ஸ், பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனங்கள், கொச்சி கப்பல் கட்டும் தளம், போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளது.[15][27][28] இங்கு கொச்சி உயர் நீதிமன்றம் உள்ளதுடன், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளதுடன், சீர்மிகு நகரம் என்ற தகுதியும் கொச்சி நகரம் பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் கொச்சி தேசியச் சட்டப் பள்ளிகள் உள்ளது.[29]