கிறீக் இனக்குழு
From Wikipedia, the free encyclopedia
கிறீக் இனக்குழு (Creek) என்பது தொடக்கத்தில் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்த தொல்குடி அமெரிக்க இனத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் இனத்தை முஸ்கோஜி (Muscogee) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இவர்கள் தற்காலத்தில் ஒக்லஹோமா, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா ஆகிய ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் ம்விஸ்கோக்கே (Mvskoke) அல்லது கிறீக் மொழி, முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தின் கீறீக் துணைப் பிரிவைச் சேர்ந்தது. செமினோலேக்கள் இவர்களுக்கு நெருங்கிய இனத்தவராவர். அவர்களும் கிறீக் பிரிவு மொழியொன்றையே பேசுகின்றனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனக் குறிப்பிடப்படும் பழங்குடிகளுள் கிறீக் இனத்தவரும் அடங்குவர்.[1][2][3]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
கிறீக் தேசிய இனக் கொடி ஒப்போத்லேஅகோலா, முஸ்கோஜிகளின் தலைவன், 1830s | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(50,000-60,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஐக்கிய அமெரிக்கா (ஒக்லகோமா, அலபாமா) | |
மொழி(கள்) | |
ஆங்கிலம், கிறீக் | |
சமயங்கள் | |
புரட்டஸ்தாந்தம், பிற | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முஸ்கோஜி மக்கள்: அலபாமா, சிக்கசாவ், சொக்ட்டாவ், கோஷாத்தா, மிக்கோசுக்கீ, செமினோலே |
மூடு