கல்லூரி
பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும் / From Wikipedia, the free encyclopedia
கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.[1][2][3]